Header Ads



"மைத்­தி­ரி­பால ஒரு, அர­சி­யல்­வாதி அல்ல"


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு அர­சி­யல்­வாதி அல்ல, அவர் மிகச்­சி­றந்த இரா­ஜ­தந்­தி­ரி­யாவார்.  அவரின்  இரா­ஜ­தந்­திர நகர்­வு­களின் மூல­மா­கவே நாடு சரி­யான திசையில் பய­ணித்து செல்­கின்­றது என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் மூல­மா­கவே நாட்டின் சுயா­தீனம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.   அவர் மேலும் கூறு­கையில்; 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுக்கும் நகர்­வுகள் மற்றும் தீர்­மா­னங்கள் திட்­டங்கள் அனைத்­துமே மிகவும் தெளி­வான அதே நிலையில் ஊழல் அல்­லாத வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மத்­திய வங்கி ஊழல் விவ­கா­ர­மாக இருந்­தாலும் சரி அல்­லது நாட்டின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளிலும் ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டு­களே சிறந்­த­தாக அமை­கின்­றன. என்னைப் பொறுத்­த­வ­ரையில் ஜன­ாதி­ப­தியை    ஒரு அர­சி­யல்­வா­தி­யாக நானா கரு­த­ வில்லை. அவரை ஒரு இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவே நான் கரு­து­கின்றேன். அவர் சர்­வ­தேச நாடு­க­ளுடன் கொண்­டுள்ள நட்­பு­றவு, காரி­யங்­களை வெற்­றி­கொள்ளும் சாணக்­கி­யத்­தனம் ஆகி­ய­னவே நாட்­டினை சகல தன்­மை­க­ளையும் தக்­க­வைத்து வரு­கின்­றன. 

 ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் குறித்து வின­வி­யதை சிலர் தவ­றான வகையில் விமர்­சித்து வரு­கின்­றனர். ஆனால் இதற்கு முன்னர் நீதி­மன்றம் மீது இருந்த அழுத்தம், கட்­டுப்­பா­டுகள், சுயா­தீன செயற்­பா­டு­களில் இருந்த தடைகள் எவையும் இன்று இல்லை. ஜனா­தி­பதி தனது சந்தேகத்தை வினவினார், அத்துடன் ஒதுங்கிக்கொண்டார். மாறாக தான் ஒருபோதும் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடவில்லை. ஆகவே இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.