Header Ads



இளவரசர் அல்வலீத் தலாலுக்கு, என்ன நடக்கிறது..?


சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான மிகப்பெரும் பணக்கார இளவரசரை கடும் சித்திரவதைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான 200 இளவரசர்களில் அல்வலீத் தலாலும் ஒருவர். சவுதியின் மிகப்பெரும் பணக்காரரான இவர் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

கைதான இளவரசர்களிடம் அவர்களின் சொத்து மதிப்புக்கு ஏற்றவாறு ஒரு பெருந்தொகையை செலுத்திவிட்டு விடுதலை பெற்றுக்கொள்ளுமாறு சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சில இளவரசர்களும் முன்னாள் அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இளவரசர் அல்வலீத் தலாலிடம் பட்டத்து இளவரசர் சல்மானின் தலைமையில் இயங்கும் சவுதி அரசாங்கம் இழப்பீடாக 728 மில்லியன் பவுண்ட்ஸ் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் குறித்த தொகையை செலுத்த இளவரசர் தலால் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அவரை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி சவுதியின் உச்சகட்ட பாதுகாப்பில் அமைந்திருக்கும் Al-Ha’ir சிறையில் இளவரசர் தலாலை அடைத்துள்ளனர்.

குறித்த சிறையில் உள்ள சுமார் 60 கைதிகளை வேறு சிறைக்கும் மாற்றியுள்ளனர்.

இதனிடையே பின்லாதன் குழுமத்தின் நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொண்ட சவுதி அதிகாரிகள் சில நிறுவனங்களை கைப்பற்றியதுடன், பின்லாதன் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் கைது செய்துள்ளானர்.

மட்டுமின்றி பின்லாதன் குழுமத்திற்கு சவுதி அரசு செலுத்தவேண்டிய சுமார் 21 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை ரத்து செய்யும் நடவடிக்கையில் பட்டத்து இளவரசர் தலைமையிலான அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2 comments:

Powered by Blogger.