Header Ads



பரோட்டா கொள்வனவு, செய்தவரின் மனிதாபிமானம்

அனுராதபுரத்தில் பரோட்டா கொள்வனவு செய்த ஒருவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள பேக்கரியில் 5 பரோட்டங்களை கொள்வனவு செய்த தந்தை மற்றும் மகன் வீட்டிற்கு சென்று அதனை சாப்பிடத் தயாராகினர். இதன்போது அந்த பார்சலில் ஒரு தொகை பணம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணத்தை அவதானித்த மகனும் தந்தையும் உடனடியாக அதனை பேக்கரி உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான கே.சந்திரசேகர மற்றும் அவரது மகன் பசிந்து தில்ஷான் என்பவர்களே இந்த மனிதாபிமான செயலை செய்துள்ளனர்.

தந்தையும் மகனும் தமது கடையில் 5 பரோட்டங்களை கொள்வனவு செய்தனர். மகன் பணம் செலுத்தும் போது அந்த கடையின் ஊழியர் ஒருவர் அந்த பார்சலுக்கு அருகில் பணத்துடனான கவர் ஒன்றை வைத்துள்ளார். பரோட்டாவை பெற்றுக் கொள்ளவந்தவர்கள் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

பணம் காணாமல் போனமையினால் பதற்றமடைந்து அனைவரும் தேடி கொண்டிருக்கும் போது, தந்தையும் மகனும் பணத்தை ஒப்படைத்தனர் என பேக்கரியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நல்ல வேலை அது எமது அரசியல் தலைவர்களின் கைகளில் கிடைக்கவில்லை! பராட்டா சுத்தியிருந்ந பேப்பரையும் திண்டிருப்பானுகள்

    ReplyDelete

Powered by Blogger.