Header Ads



"உங்களால் எல்லோரும், பெருமை கொள்கிறோம்"


19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர் ஹசித போயகொடவை குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார்.

U19 உலக கிண்ண தொடரின் ஆட்டத்தில் இலங்கை - கென்யா அணிகள் மோதியது.

இந்த போட்டியில் இலங்கை வீரர் ஹசித போயகொட 152 பந்துகளில் 191 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் U19 உலக கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை ஹசித படைத்தார்.

இந்நிலையில், ஹசிதவை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

அதில், அற்புதமான 191 ஓட்டங்களுக்காக வாழ்த்துக்கள் ஹசித போயகொட. உங்களால் எல்லோரும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.