January 07, 2018

ர‌வூப் ஹ‌க்கீம், உட‌ன‌டியாக‌ வாப‌ஸ் வாங்க வேண்டும்

சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌ல் நிர்வாக‌த்தை தேர்த‌ல் ஆணையாள‌ர் மூல‌ம் க‌லைப்போம் என‌ ர‌வூப் ஹ‌க்கீம் பேசியிருப்ப‌து மிக‌ மோச‌மான‌ அத்துமீற‌லையும் அவ‌ர‌து அக‌ங்கார‌த்தையும் க‌ர்வ‌த்தையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி க‌ண்டித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாறக் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

இன்றைய‌ சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் த‌னி ச‌பைக்கான‌ போராட்ட‌ம், தேர்த‌லில் சுயேற்சையாக‌ க‌ள‌மிற‌க்க‌ல் போன்ற‌வ‌ற்றுக்கு கார‌ண‌ம் முஸ்லிம் காங்கிர‌சின் முட்டாள்த்த‌ன‌மான‌ பிர‌தேச‌ வாத‌மும், பிர‌தேச‌ ஒதுக்குத‌லும் எப்ப‌டியாவ‌து ம‌க்க‌ளை ஏமாற்றி வாக்கு பெற‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கிய‌மையுமாகும்.
எந்த‌வொரு ச‌மூக‌த்தையும் யாரும் தொட‌ர்ந்து ஏமாற்ற‌ முடியாது என்ப‌தை உல‌க‌ வ‌ர‌லாறு காட்டுகிற‌து. ஏமாற்று த‌லைவ‌ர்க‌ளை பொது ம‌க்க‌ள் புர‌ட்சி வெகடிக்கும் போது அவ‌ர்க‌ளை ஓட‌ ஓட‌ விர‌ட்டிய‌ வ‌ர‌லாறை க‌ண்டுள்ளோம்.

முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சி முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றி பிழைக்கிற‌து என்றும் ஹ‌க்கீமை கிழ‌க்கு ம‌க்க‌ள் த‌ம‌து ஜ‌ன‌நாய‌க‌ எல்லைக்குள் நின்று விர‌ட்டாவிட்டால் முழு ச‌மூக‌மும் பாத‌க‌த்தை ச‌ந்திக்கும் என்ப‌தையும் உல‌மா க‌ட்சியின் ஸ்தாப‌க‌ கால‌ம் முத‌ல் சொல்லிவ‌ருகிறோம்.  இப்போதுதான் மிக‌த்தாம‌த‌மாக‌ சாய்ந்த‌ம‌ருது இந்த‌ உண்மையை உண‌ர்ந்துள்ள‌து.
க‌ல்முனை, அட்டாளைச்சேனை, நிந்த‌வூர் என‌ அம்பாரை மாவ‌ட்ட‌த்தின் அனைத்து ம‌க்க‌ளும் இந்த‌ உண்மையை உண‌ர்ந்தாலும் சில‌ர் த‌டுமாறிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். அத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு ஹ‌க்கீமின் ப‌ள்ளிவாய‌ல் நிர்வாக‌த்தை க‌லைப்போம் என்ற‌ திமிர் பேச்சு சிற‌ந்த‌ பாட‌மாக‌ இருக்கும்.

முஸ்லிம் காங்கிர‌சுக்காக‌ 99 வீத‌ம் வாக்க‌ளித்த‌ சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் ப‌ள்ளி நிர்வாக‌த்தை க‌லைப்போம் என‌ எங்கேயோ இருந்து வ‌ந்து இங்கு கூறுகின்றார் என்றால் நாளை கிழ‌க்கின் ஒவ்வொரு ஊருக்கும் இந்த‌ ஹ‌க்கீம் த‌ன‌து திமிறைக்காட்டுவார்.

ஆக‌வே ர‌வூப் ஹ‌க்கீம் உட‌ன‌டியாக‌ த‌ன‌து இக்க‌ருத்தை ப‌கிர‌ங்க‌மாக‌ வாப‌ஸ் வாங்க வேண்டும். அதே போல் கிழ‌க்கில் உள்ள‌ அனைத்து ப‌ள்ளிவாச‌ல் நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹ‌க்கீம் இத்த‌கைய‌ அக‌ங்கார‌ பேச்சை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

5 கருத்துரைகள்:

முபாரக் மௌலவி அவர்களின் கோரிக்கை முற்றிலு சரியான கோரிக்கை. இது ஏன் இன்னும் கிழக்குக்கு
புரியிதில்லையென்பதுதான் பெரும் கவலையான விடயம். கிழக்கை கிழக்கான் ஆள்வதுக்கு இன்னும் கிழக்கில் யாரும் இல்லியா? ஏன் அன்னியவர்களுக்கு இன்னும் அடிபணிந்து பயந்து வாய் பொத்தி கைகட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் காக்கை பிடிப்பதிலேயே குறியாய் இருக்கிறீர்கள்.

போதுமப்பா வரி வழங்கி கொடுத்தது. இனியாவது நமது உள்ளூட்டு பிரச்னையைப் பார்ப்போம் இது எண்கள் மண், இது எங்கள் இடம் இங்கு நாங்கள்தான் ராஜா

http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_635.html
http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_987.html
http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_820.html

Read the news carefully

ஊரைப் பிரித்து காட்டி போட் கேட்கிற வங்குரோத்து அரசியலை
அல்லாஹ்காக விடுங்க.

@ Noorul Musthakeem stop ur nonsense.
We are Muslims anyone who Has the qualification to rule can rule.
உங்கள் பிரதேசவாத கொள்கையை மாற்றிக்கொள்ளுங்கள். Hakeem சரியில்லை என்றால் மக்கள் வேறொருவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.
உங்கள் பிரதேசவாச கொள்கையை கொழும்பானும் கடைபிடித்தால் உங்கள் ஊர்கார்ர்கள் கொழும்பில் பிழைப்பு நடத்துவது எப்படி? அமைச்சர் அஷரப் முழு கிழக்கையும் கொழும்பு havour இல் போட்டார்களே அதற்கு உங்களைப்போன்ற மூலைகெட்ட கொழும்பன் எதிர்ப்புத்தெரிவித்திருந்திருந்தால்?
உங்களை ஈன புத்தியை விட்டு விட்டு மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களை தேர்தெடுங்கள். இந்த ஊரகாரன் , உறவினர்கள் , நண்பன் என்றெல்லாம் பாரக்கவேண்டாம்.
Remember we are Muslims. We are all same regardless of the city we are from.

Mr.Nazeer China Ibrahim,

Please read below link

http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_837.html

I think now you will get clear.

Post a Comment