Header Ads



மைத்திரியின் வாள் வீச்சுக்கு, ரணிலின் தற்காப்பு இவ்வளவுதான் - ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவிப்பு

கடந்த 10 மாதங்களாக  இந்த விசாரணையை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுனில் ஹந்துனெத்தியின் தலைமையின் கீழ் கோப் குழு ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிணைமுறி விவகார அறிக்கையானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரின் அறிவுரைக்கமைய சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு 2016ஆம் ஆண்டு பிரதமராலும், இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதியாலும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தை மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய 2008ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்குப் மிக விரைவில் சட்டப்படி தண்டனை வழங்கபடும்...

    ReplyDelete

Powered by Blogger.