Header Ads



இஸ்லாத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைவு - பாகிஸ்தான்


இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்ளார்.

ஆறுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை  மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதைப்போல் பாலஸ்தீனம் நாட்டுக்கு சொந்தமான பெரும்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் ஏற்றுகொண்டதில்லை’ என்று குறிப்பிட்டார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நமது நாட்டு வீரம்மிக்க படைகள் ஆவேசமாக செயல்பட்டு பல தியாகங்களை புரிந்துள்ளன. இதில் பல வெற்றிகளையும் நாம் பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்

1 comment:

  1. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
    (அல்குர்ஆன் : 8:60)

    ReplyDelete

Powered by Blogger.