Header Ads



ஈரானுக்குப் போகவிருந்த இலங்கை, வீராங்கனைகள் கட்டுநாயக்காவில் வழிமறிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கை விளையாட்டு வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

விளையாட்டு அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தடகள வீர, வீராங்கனைகள் சிலர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

800 மீற்றர் ஓட்ட போட்டி வீராங்கனையான நிமாலி லியனஆராச்சி மற்றும் கயந்திக்கா அபேரத்ன உட்பட 5 விளையாட்டு வீரர்கள் ஈரான் டேஹேரான் நகரத்திற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

எட்டாவது ஆசிய உள்ளக தடகள போட்டியில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். குறித்த பயணத்திற்காக விமான டிக்கட் வழங்கப்பட்ட போதிலும், ஆசனங்கள் ஒதுக்கிக் கொள்ளாமையினாலேயே வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கான விளையாட்டு அமைச்சு பணம் செலுத்தாமையினாலேயே வீரர்களுக்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் இன்றைய தினம் அவர்கள் தங்கள் பயணத்தை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறான சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.