Header Ads



இன்று சிறிலங்கா வருகிறார், பாகிஸ்தான் இராணுவத் தளபதி


பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வா மூன்று நாட்கள் பயணமாக இன்று -15- சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

இன்று தொடக்கம் எதிர்வரும் 17ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன், பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நிபுணத்துவ நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.