Header Ads



எமது ஆட்களும் மோசடிகளில் பங்கேற்பு, என்னை கட்சியிலிருந்து வெளியேற்றினால் பரவாயில்லை


மத்திய வங்கியில் பிணைமுறி நடந்தது தான் என்பதை ஏற்றுக் கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவ்வாறான மோசடிகளை விசாரணை செய்வதென்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வாக்குறுதி எனவும், அனைத்து மக்களும் அந்நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

திஸ்ஸமஹாரமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"என்னுடைய தேர்தல் ஆசனத்திலிருந்தோ அல்லது கட்சியிலிருந்தோ நான் வெளியேற்றப்பட்டாலும் கூட, உண்மையை நான் சொல்ல வேண்டும். பொய்களைச் சொல்லும் பழக்கத்தில் நான் இல்லை. பொய்களைச் சொன்னால், வாய்ப் புற்றுநோய் வரும். எங்களது ஆட்களும், மோசடிகளிலில் ஈடுபட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகள், 20 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளில் இருந்துவிட்டு, முன்னைய ஆட்சியாளர்களைப் பின்பற்றி, நாட்டின் வளங்களைச் சூறையாடுகின்றனர் என, பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்துக்கு வந்தால், அரச பணத்தைத் திருடுவார்கள் என்று கூறியமையை, பிரதியமைச்சர் ரஞ்சன் ஞாபகப்படுத்தினார்.

அத்தோடு, திருடர்களைப் பிடிப்பது தான், இந்த அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இவர்களைப்போன்ற நல்ல அரசியல்வாதிகள் இருக்குமானால் நமது நாடு எப்போவே முன்னேறியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.