Header Ads



பதவியை நிராகரித்த சிராஸ் - ரணில் தூது அனுப்பியும் பயனில்லை

(அன்ஸிர்)

மூத்த சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலருமான சிராஸ் நூர்தீனை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த, மூத்த சட்டத்தரணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூதை சிராஸ் நூர்தீனிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

கொழும்பு மாநகர பிரதி மேயர் பதவியை வழங்குவதாகவும், முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்கும், தமக்கு நம்பிக்கையும் உள்ள ஒருவர் கொழும்பு மாநகர பிரதி மேயர் பதவியில், அமருவது சிறந்ததென பிரதமர் ரணில் விரும்புவதாகவும் சிராஸ் நூர்தீனிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தமக்கு அரசியலில் ஈடுபடவோ அல்லது பிரதி மேயர் பதவியை பெற்றுக்கொள்ளவோ விருப்பமில்லை எனக்கூறி அதனை சிராஸ் நூர்தீன் அடியோடு நிராகரித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

3 comments:

  1. Rare phenomenon in politics in SLanka where power hungry guys r in a scramble at each other's throat.
    MashaAllah Siraz U deserve n get it Inshazalah!

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. சாக்கடைக்குள் நுழைவதாயின் சுயேச்சையாக கேட்டு யாருக்கும் அஞ்சாது சுயாதீனமாக செயற்படுங்கள் சகோதரரே.

    ReplyDelete
  3. தன்மானமுள்ள ஒரு ஆண்.. முஸ்லிம் மக்களின் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் எமது முஸ்லிம் தலைவர்களுக்கு இவர் ஒரு தலையிடி தான்... இவரைப் போன்றவர்களை அரசியல் சாக்கடையில் விழவைத்தால் அந்த தலைவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை... அப்போது எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஊழல் செய்து சமூகத்தை விற்று லாபம் தேடுவார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.