Header Ads



மதுவரித் திணைக்களத்தையும், பிடிக்கிறார் ஜனாதிபதி

நிதி அமைச்சின் கீழுள்ள மதுவரித் திணைக்களத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்த பொருளாதாரம் தொடர்பான பொறுப்பை இந்த ஆண்டுமுதல் தாம் கையேற்கவுள்ளதாக ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சிலும் மாற்றத்தை ஜனாதிபதி ஏற்படுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் பாரிய அமைச்சரவை மாற்றமொன்று ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், நிதி மற்றும் பொருளாதாரம்சார் அமைச்சுகளை ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்துக்கு இடமளிக்கப்பட்டிருந்தபோதும் இவ்வருடம்முதல் அந்தப் பொறுப்பை தாம் கையேற்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கருத்துக்கணிப்புகளின்படி உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாமிடத்திலேயே அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாக்கு வங்கிகளுக்காக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.