January 01, 2018

அமெரிக்க தூதரை, திரும்ப அழைத்த பலஸ்த்தீனம்

பேச்சுவார்த்தைக்கான தங்களது அமெரிக்க தூதரை திரும்ப அழைக்கப்போவதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

டிரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளையடுத்து, தாங்கள் அமெரிக்காவின் எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் உடன்படப்போவதில்லை என்று பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் தெரிவித்தார்

டிரம்ப் ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து காஸாவில் போராட்டமும், கலவரமும் வெடித்தது.

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இதுவரை 13 பாலத்தீனியர்கள் இறந்துள்ளார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள், இஸ்ரேல் படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள்.

பாலத்தீனிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாட் அல் மாலிகி, பாலத்தீனிய விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) தூதர் ஹுசம் சோம்லோட்டி திரும்ப அழைத்துக் கொண்டதாக பாலத்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா கூறி உள்ளது.

பாலத்தீனியர்கள் எதிர்காலத்தில் அமைய இருக்கும் தங்கள் தேசத்துக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை, ஜெருசலேம் "பாலத்தீன மக்களின் அழியா தலைநகராக இருக்கும்" என்றார்.

ஜெருசலேம் மீதான இஸ்ரேல் இறையாண்மை இதுவரை சர்வதேச சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால், இஸ்ரேலுக்கான தங்களது தூதரங்களை இஸ்ரேலின் மைய நகரமான டெல் அவிவில்தான் அமைத்துள்ளன. அண்மையில் டிரம்ப் அமெரிக்க தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

4 கருத்துரைகள்:

When we Saudi do it.
If Saudi has had good diplomacy for the last 70 years ...Muslim world would not have any problem like. They become slave to US and Isreal.
This sold out Muslim world dignity in the world .
It is duty of each Muslim in the world to remove these nasty Saudi rulers and replace them with good people .for salafi and wahabis It is haram to do..

believe me or not .. Today Saudi and its agents should take responsibility for many problems of Muslim world .. In 1950s there was conference to in former soviet unions Muslim countries to decide the guardianship of two Muslim sacred Muslims : some muslim countries like Pakistan, Indonesia and Some other countries had the opinion that the maintenance of Kaba should go into hands of International body so that it could be maintained properly : But Saudi bribed some country to take over it.. in voting in support of Saudi. Look what Saudi regime does it for Muslim world. How could they rule over it now. It is morally not fitting to kills millions of Children in Yeoman and wasting public wealth and look after these sacred places. How on earth rulers who buy a palace in Spain for 300 million provide guardianship to the most sacred mosques in Islam: What is wrong with Salafi people who support Saudi rules blindly? why they do it? it is Saudi money speaking? nothing else . No aqeeda or No theology but money : when Saudi stopp its money then all these Salafi stopped supporting Saudi

முதலில் சிறிதளவாயினும் எதையாச்சும் சொந்தமாக உருவாக்க முயற்சிக்கவேண்டும். எல்லா சனியனுக்கும் இன்னொருவரை நம்பியே அரபுநாடுகள் பழகிவிட்டன. அதுவே அடிமைப்பொறியில் சிக்க முதல்காறணம்.

சொந்தமாக அங்குலம் நிலமில்லாமல் எங்கோகிடந்து சீரழிந்து திரிந்த யஹூதிகள் நமது சொந்த நிலத்தை அபகரிக்க அரபுகளின் பேத்தனமும், பேக்கத்தனமுமே காறணம். ஆயுதம் வேணுமா அந்தநாடு, உணவு வேண்டுமா இந்தநாடு, அவன் அதை இதை கொடுத்து பின்னால்தட்டி தூங்கவைத்துவிட்டு பத்திரத்த அவன்பொயரில் மாத்திட்டான்.

அதுதான் அவனது கலாச்சாரம்.

இப்பதான் தூங்கி விழிச்சிருக்கம், இனி தேறனும். انشا الله...

ان احدكم عبد ربه سبعين عاما لين الكعبة ومقام إبراهيم ثم اتي يو القيامة وهو يحب الظالم وهو دخل نارجهنم معه..
ابن مسعود..

Post a Comment