Header Ads



முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடம் - கல்வியமைச்சு அதிரடி


கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் உள்ள மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான  வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் காணப்படும் சகல மொழி மூலமான பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப்பாடத்தை கற்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மாணவர்களிடத்தில் ஆரம்பத்திலிருந்தே மொழி ஆற்றலை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்ச தீர்மானித்துள்ளது. 

இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப்புத்தங்களை அச்சிட்டு விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமுல் படுத்துவதற்கான செயற்திட்டங்கள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளன. 

விஷேட செயற்திட்டங்கள் மூலம் முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு விஷேட பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும். 

1 comment:

  1. மும்மொழிகளும் ஆரம்ப வகுப்பு முதலே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

    அடிப்படைத் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் ஆகிய  இரண்டு மொழிகளும் குறைந்த பட்சம் ஆரம்ப வகுப்பு முதலே அளிக்கப்பட்டாக வேண்டும்.

    ஆங்கிலத்துக்கு முன்னதாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது, தேசிய இனங்களின் தேசிய மொழிகளுக்கே!

    மும்மொழிகள் அல்லது தேசிய மொழிகளான இரு மொழிகளில் எம்மொழியிலாவது, தமது தேவைகளை நாட்டின் எப்பகுதியிலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாக வேண்டும்.

    ஒழுக்கவியலும் ஓர் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும்.  அதில் நற்பண்புகள், சக மனிதர்களுக்கு இடையேயான ஒற்றுமை, சூழல் மற்றும் சமூகப் பொறுப்புகள், போக்குவரத்து விதிகள் போன்றவை உள்ளடக்கப்பட வேண்டும்.

    சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் சிறு வயது முதலே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.