Header Ads



கிழக்கு மக்களின், உள்ளக் குமுறல்கள்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

கிழக்கின் ஆட்சி  அதிகாரம் எப்போதும் தமது கையில் தான்  இருக்கும் என தெரிவித்துவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையினால் தலையிடி பிடித்துள்ளதாக  தெரிகின்றது. கடந்த 17 வருடகாலமாக இந்த மககளின் எதிர்ப்பார்ப்புக்களை சவப்பெட்டிக்குள் வைத்துவிட்டு வெறுமனே வெற்று பேச்சுக்களை மட்டும் கூறி வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய தேர்தல் தொடர்பிலும்,மக்களின் நாட்டம் தொடர்பிலும் கண்டறியும் வகையில் அங்கு விஜயம் செய்து தரவுகளை திரட்ட முடிந்த போதே மக்களின் கருத்துக்கள் இவ்வாறாக இருந்தது.

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,அட்டாளைசசேனை,சம்மாந் துறை,நிந்தவூர்,கல்முனை பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்க நேரிட்டது.இதன் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொண்ட தொகுப்பாக இதனை முன்  வைக்க விரும்புகின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக மக்கள் மத்தியில் பெறும் அதிருப்தி நிலை தோன்றியுள்ளது.கிழக்கில் மாயக் கல்லி மழையில் சிலை வைக்கும் சம்பவம் முதல் கல்முனையில் இருந்த வெளிநாட்டு பணியகத்தை பெரும்பான்மை சமூகம் அகற்றிய போதும்,அது தொடர்பில் சமூகத்தினை மறந்து கட்சி தலைமையின் நலனுக்காக மட்டும் செய்றபட்டதாகவும்,தைரியமற்ற அறிக்கைகளை மயாக்கல்லி மழைக்கு சார்பாக வெளியிட்டமை இந்த கிழக்கு மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் துரேகாம் செய்துள்ளதினால்,தொடர்ந்து இந்த கட்சியினை நம்பி அரசியல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான ஒரு நிலையில்  தமது உரிமைகளையும்,பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ள அரசியல் ரீதியிலானபலமிக்க அமைப்பின் அவசியம் ஏற்பட்டதால் முஸ்லிம்தலைமைத்துவத்தை கொண்ட அரசியல் இயக்கமொன்று தேவையென்பதை உணர்ந்து சில காலங்கள் பயணித்த போது,அந்த இயக்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக ஏன் இருக்க கூடாது என்று தாங்கள் சிந்தித்ததாக அம்மக்கள் எடுத்துரைத்தனர்.கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 33000 வாக்குகளை பெற்றதன் மூலம் அந்த அரசியல் அங்கீகாரத்தை கிழக்கில் பெற்றுள்ளதுடன்,பாராளுமன்ற பிரதி நிதித்துவம் கிடைக்காத நிலையிலும் மக்களுக்கான பல பணிகளை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்துவருவதைால் அதனை எமது அரசியல் அங்கமாக ஏற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிழக்கில் முக.காவில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிப்பதும்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை ஏனைய கட்சிகளுக்கு தாரைவார்த்து கொடுப்பதும் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமான நிலையினை ஏற்பாடுத்தாது என்பதை ஆழமாக புரிந்து கொண்டதுடன்,மு.கா.தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து வடக்கையும்,கிழக்கையும் இணைத்து மீண்டும் தமிழ் சமூகத்தினை பெரும்பான்மை சமூகமாக மாற்ற எடுத்திருக்கும் நிழல் வரைவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கிழக்கில் பெரும்பான்மை முஸ்லிம்கள சிறுமைப்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லையென  பலமான கருத்தாக அம்மக்கள் முன் வைக்கின்றனர்.

இந்ந நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குரியாக்கிவிடும் என்பதினால்  அரசியல் ரீதியான மதற்றமொன்றின் அவசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதி இன்று கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.என்பதை அவர்களது கருத்தில் இருந்து பிரித்து நோக்கமுடிகின்றது.

 குறிப்பாக அண்மையில் பாராமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகார பகிர்வு மற்றும் தேர்தல் திருத்தங்கள் என்பவை முஸ்லிம் சமூகத்தினை எவ்வாறு பாதிக்கும் என்பது  தொடர்பில் துறைசார்ந்தவர்களும்,உலமாக்களும் ,புத்தி ஜீவிகளும் தெளிவான விளக்கமொன்றினை அளித்த நிலையில் அவர்களது கருத்துக்களுக்கு சிரம் சாய்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும்,அதன் தலைமையும் எடுத்த விடா பிடியான சண்டையினால் ஓரளவு குறைந்த பாதிப்பை சமூகம் எதிர்நோக்க நேர்ந்தன,ஆனால் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரசும்,அதனது தலைமையும் பேசா மடந்தையாக அவர்களது சுகபோகத்திற்காக மௌனிகாள இருந்த சம்பவம் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தி அம்மக்கள் தெரிவித்தனர்.

இவைகளை வைத்து பார்க்கின்ற போது எதிர் வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பெரும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கின்றதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் பல அமைப்புக்களை கொண்ட கூட்டாக கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற அணியில் வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது ஒரளவு அம்மக்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

4 comments:

  1. Mayil Ondume pudunga mudiyaathuppa...porutthurungal

    ReplyDelete
  2. Adi adi ha adithu viduga makkal nampavaporrarkal

    ReplyDelete
  3. கிழக்கை கிழக்கான் ஆள்வதுக்கு இன்னும் கிழக்கில் யாரும் இல்லியா என்ற கேள்விக்கு எப்பதான் பதில் கிடைக்குமோ? ஏன் அன்னியவர்களுக்கு இன்னும் அடிபணிந்து பயந்து வாய் பொத்தி கைகட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் காக்கை பிடிப்பதிலேயே குறியாய் இருக்கிறீர்கள்.

    முஸ்லீம் காங்கிரேசன எமது வாக்கை வாரி அள்ளிக்கொடுத்தது போதுமப்பா. இனியாவது நமது கிராமத்தை நாங்கள் நடத்துவோம்

    ReplyDelete
  4. Thanitthu kalamirangungal athukkaga...
    Kodarikkambugalai, athe poyyargalai, Kudikaarargalai, nayavanjagargalai, (Tholil athipargalai)...!, Motta Sillarai viyapaarigalai Mayil Endrum, Kuthirai Endrum, Iykkiyamana Koottamaippu endrum.....Saithamaru Mosque endrum... Kondu vanthaal Kadaisiyil Adi Vaanguvathu namma makkal mattumthaan periyorgale..!
    Puthisaaha vara thudikkum Tholil athipargalai..! vida Palaya pichaikarene meal....Yositthu mudivu pannungo..

    ReplyDelete

Powered by Blogger.