Header Ads



நான் இன்று, துரோ­கி­யாக உள்ளேன் - ஜனா­தி­பதி

மத்­திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட ரீதியில் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாட்டில் பிரதமர் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும்.  மாறாக  பிர­தமர் மற்றும் ஆளும் எதிர்க்கட்­சி­ யினர் என்னை பல­வீ­னப்­ப­டுத்தி ஊழல்வாதி­களை காப்­பாற்ற முயற்­சிக்­கக்­கூ­டாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சா ரக் கூட்டம் கண்­டியில் இடம்­பெற்­றது, இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி ­ய­போதே  ஜனா­தி­பதி  மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார்.  அவர் மேலும்  உரை­யாற்­று­கையில் 

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள்    மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்­துள்ள அறிக்­கைக்கு அமை­வாக அனை­வ­ருக்கும் எதி­ராக சட்­டத்தை நடை­முறை படுத்தி அவர்­க­ளுக்கு தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க  எனக்கு ஒத்­து­ழைப்பு தாருங்கள். 

  பிர­தமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்­சி­யினர் அனை­வரும் ஒரே நோக்­கத்தில் செயற்­ப­டு­வீர்கள் என்றால் இந்த பய­ணத்தில் என்னை பலப்­ப­டுத்­துங்கள்.  என்னை  பலப்­ப­டுத்­து­வதை விடுத்து எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் என்னை  பல­வீ­னப்­ப­டுத்த வேண்டாம். அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும்  எடுக்க வேண்டாம் . 

2014 ஆம் ஆண்டு நான்  அப்­போ­தைய அர­சாங்­கத்தில் இருந்து வில­கிய போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்­மீது குற்றம் சுமத்­தி­னார்கள்.  இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் என்­மீது  குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.  

நான் எந்தக் கட்­சிக்கும் துரோகம் இழைக்­க­வில்லை.  ஊழல் மோச­டிகள் அனைத்­தையும் ஒழிப்­ப­தற்கு  முன்­வ­ரு­கின்றேன். ஊழலை ஆத­ரிக்கும் அவ்­வா­றான நபர்­க­ளுக்கு மட்­டுமே நான் இன்று துரோ­கி­யாக உள்ளேன்.  இன்று மத்­திய வங்கி அறிக்கை தொடர்­பாக மேடை­களில் கூச்சல் போடும் முன்னாள் தலை­வர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா  பிரே­ரணை கொண்­டு­வந்த போது பாரா­ளு­மன்­றத்­திற்கு  வருகை தந்து  வாக்­க­ளிக்­க­வில்லை. 

ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய  மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும்  என்றார். 

3 comments:

  1. So, take action and report about the old gang soon...why only the new subject only...?

    ReplyDelete
  2. எனக்கு அது தெரியும், இது தெரியும், எல்லாம் தெரியும் என கொக்கரித்து திரியாமல் செயலில் காட்டுபவனே உண்மையான வீரன். மஹிந்த காலத்தில் இடம்பெற்ற எல்லா ஊழல், மோசடிகள், கொலைகள் எல்லாம் நாடறிந்த உண்மைகள் அல்லவா நீர் அதிகாரத்துக்கு வந்து 3 ஆண்டுகளு கடந்து விட்டது அவைகளுக்கு எதிராக உம்மால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது My 3 அவர்களே. ஆக இன்னும் 2 டே 2 ஆண்டுகள் உண்டு கண்ணை மூடி திறப்பதற்குள் அவை பறந்து விடும் நீர் வாழ் சுழற்றியது மட்டும் தான் மிஞ்சும் நீர் சேரித்து வைத்திருக்கும் பைல்களை எல்லாம் கறையான் தின்று விடும். அப்புறம் பழய குறுடி கதவை திறவடி தான் இந்நாட்டின் நிலமை.

    ReplyDelete

Powered by Blogger.