January 31, 2018

மௌலவியின் வாகனத்தை நொறுக்கிய, அரசியல் கைகூலிகள்

2018 ஜனவரி 26ந் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற ஜும்ஆ பேருரையின் போது "இஸ்லாம் கூறும் அரசியலும், சமூகத்தின் ஒற்றுமையும்” எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறைமைகளையும் பிர்அவ்னின் கொடுங்கோல் ஆட்சியினையும் ஆதாரங்களாகக் காட்டி குத்பா பிரசங்கம் செய்த சர்வதேச புகழ்பெற்ற எல்லோரும் மதிக்கின்ற, அரசியல் பேதமற்ற  அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தினதும், நிந்தவூர் பாதீமா அரபுக் கல்லூரியினதும் அதிபருமான மௌலவி அல் - ஹாபீல் ஏ.ஏ.அலி அஹமட் (ரஷாதி) அவர்களின் மோட்டார் பைசிக்கில் அன்னவரின் சாய்ந்தமருது இல்லத்தின் முன்றலில் வைத்து அரசியல் கைகூலிகளினால்  அடித்து நொறுக்கப்பட்டு சேதத்திற்கு உளாக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வை கண்டித்து

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கண்டன அறிக்கையினை விட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவமானது நாகரிகமற்ற, மனிதாபினமற்ற, வெட்கக்கேடான இழிசெயலாகும். இச்சம்பவமானது இஸ்லாத்தை போதிக்கும், எம்மக்களால் மதிக்கப்படும் உலமா பெருந்தகைகளுக்கு ஓர் அச்சுறுத்தல் சம்பவமாகவே பார்க்கவேண்டியுள்ளது. உலகுக்கு மனித நாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் காட்டித்தந்த எம்பெருமானார் ரசூலே கரிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் போதனைகளை போதிக்கும் உலமாக்களின் குரல்வளைகளை நசுக்க முற்படும் இச்செயலை அனைவரும் கட்சி பேதமின்றி கண்டிக்க முன்வர வேண்டும்.

ஏனெனில், நவீன உலகில் இஸ்லாத்தை ஓங்க வைப்பதில் உலமாக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக உலமாக்கள் பின்வாங்குவார்களேயாயின் எமது எதிர்கால இளம் சந்ததினர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். இஸ்லாத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தூரம் அதிகமாகி விடும்.

எனவே, இச்செயலுக்கு பாரபட்சமற்ற வகையில் பொலிஸாரும், துறைசார்ந்தவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதுடன், இச்செயலை செய்தவர்களையும், செய்ய தூண்டியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

செயலாளர்

ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்,
சாய்ந்தமருது - மாளிகைக்காடு
2018.01.31

7 கருத்துரைகள்:

What about the issue when your village people robbed other politicians vehicles and try to attack them...?
So, the well called Jumma Mosque no any notice for those incidents...?
May be this Rashadi talked good for you people thisis why you established this notice..?
Shame....and Masjid going for self motivations....

Puli area
They learned from tigers
Greedy people

Well said Nazeer China Ibrahim. However violent must be condemn.

உங்கள் அறிக்கையைப் பார்த்துவிட்டு இத்தகைய அரக்கர்களின் செயல்களை யாரும் அங்கீகரிக்க முடியாது. உடனடியாக அந்த அநியாயக்காரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒத்துழையுங்கள்.உலமாக்களை அவமதி்த்து கேவலப்படுத்தும் இத்தகைய ஈனச் செயல்களை உடன் தடுத்துநிறுத்த ஆவன செய்யுங்கள்.

காட்டு மிராண்டிகள்.

காடையர்கள் மாற்று கட்சி வேட்பாளர்களின் வாகனங்களையும் வீடுகளயும் உடைத்து நொறுக்கிய போது இந்த நடுநிலை நிர்வாகம் அவர்களுக்கு வீரவரவேற்பு கொடுத்து ஊக்கமூட்டியதே.. இதற்கும் இன்னொரு சாரார் பாராட்டுவார்கள்.. பள்ளிவாயல்களை சாக்கடை அரசியல் செய்யும் கூடாரமாக்கிய பாவிகள் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும்.

எது எவ்வாறு இருந்தாலும் குத்பா பிரசங்கம்
செய்த ௌலவி அவரகளுக்கு அபகீர்த்தியை
ஏற்படுத்தியதை ஏற்று ொள்ளமுடியாது.ஆனால் அவரது பிரசங்கம்
மார்க்க ரீதியாக முரண்பட்டால் மார்க்கரீதியாக
எதிர் ௌள்ளவேண்டுமே தவிர கா டைத்தனத்தை
ஏற்றுக் ௌள்ள முடியாது ச ோதரே.

Post a Comment