Header Ads



ஜில்மாட் செய்யாமல் இருந்தால், நாங்கள் வெல்லுவோம் - மஹிந்த

அரசு கம்பியூட்டர் ஜில்மாட் செய்யாமல் இருந்தால் தேர்தலில் நாங்கள்தான் வெல்லுவோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டமொன்றில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்திருந்தது. தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றதால் அன்றையதினம் மாலை 4 மணிக்கு பின்னரே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியுமென தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

"தேர்தல் கடமைகளுக்கு இடையூறு செய்கிறீர்களா?'' என்று முன்னாள் ஜனாதிபதி கேட்டபோது பதிலளித்த தேர்தல் ஆணைக்குழுத் தலைவர், "இல்லை... இல்லை... நாங்கள் தபால்மூல வாக்களிப்பினால்தான் அப்படி செய்தோம்'' என்றார்.

தபால் மூல வாக்களிப்பெல்லாம் தாமரை மொட்டுக்கே கிடைக்கும் எனவும், அரசு கம்பியூட்டர் ஜில்மாட் செய்யாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியே வெல்லும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சொன்னபோது சத்தமாக சிரித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், "வாக்குகளை கணக்கெடுத்துப் பார்ப்போமே'' என்று கூறினாராம் என்றுள்ளது.

1 comment:

  1. மஹிந்த தொர ஜில்மாட் நீங்க பேசலாமா???? நீங்க பண்ணாததுங்களா??

    ReplyDelete

Powered by Blogger.