Header Ads



"எனது மூளைக்குள் மெம­ரிக்காட் உள்­ளது - அதை கைத்­தொ­லை­பே­சி­யாகப் பயன்­ப­டுத்­துவேன்”

(மயூரன்)

யாழில் உள்ள டான் தனியார் தொலைக்­காட்சி நிலை­யத்தின் கலை­ய­கத்­துக்குள் கத்தி, பொல்­லுடன் நுழைந்து நிறு­வ­னத்தின் செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வரை எதிர்­வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு யாழ்ப்­பாணம் நீதிவான் நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சாலை வீதியில் அமைந்­துள்ள குறித்த தொலைக்­காட்சி நிறு­வன கலை­ய­கத்­துக்கு திங்­கட்­கி­ழமை மாலை ஒருவர் அத்­து­மீறி நுழைந்து பணி­யி­லி­ருந்த செய்திப் பணிப்­பாளர் தயா மாஸ்டர் என அழைக்­கப்­படும் வே.தயா­நி­தியை தாக்­கினார்.

அவ்­வேளை அங்கு கூடிய நிறு­வன ஊழி­யர்கள் முதி­ய­வரை மடக்கிப் பிடித்து அவரை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர். இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட நப­ரிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இதன் போது சந்­தேக நப­ரான முதி­யவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்றே வாக்­கு­மூலம் வழங்­கி­ய­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

“எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தினர் தன்­னி­ட­முள்ள இர­க­சி­யங்­களை பெற முயற்­சித்­தனர் . என்­னிடம் கைபே­சி­யில்லை, எனது மூளைக்குள் மெம­ரிக்காட் உள்­ளது.

அதை தேவை­யான போது கைத்­தொ­லை­பே­சி­யாகப் பயன்­ப­டுத்­துவேன்” என அவர் விசா­ர­ணையின் போது கூறி­ய­தா­கவும், 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஐரோப்­பிய நாடு­களில் பணி­யாற்­றி­விட்டு நாடு திரும்­பிய குறித்த முதி­யவர் தற்­போது யாழ்.பிர­தான வீதி­யிலுள்ள அந்­தி­ம­கால சேவை நிறு­வ­னத்தில் பணி­யாற்­று­கிறார்” எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

முதி­ய­வரை யாழ்ப்­பாணம் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­திய போது குறித்த நபர். மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் போன்று நடந்­து­கொள்­கிறார் என நீதி­வா­னிடம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

“இத­னை­ய­டுத்து இந்த நபரின் செயற்­பா­டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.