Header Ads



மஹிந்தவை பிரதமராக்க நடவடிக்கை..!

பெப்ரவரி பத்தாம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நாங்கள் தயார். ஜனாதிபதியே ஆரம்பத்தில் இதனை தவறவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எமக்கு அளிக்கும் வாக்குகள் மூலம் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக்க நடவடிக்கை எடுப்பாேம்.அதனால் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெற இருக்கும் தேர்தலில் நாங்கள் அடையும் வெற்றியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரும் இணைந்து வந்தால் தனி அரசாங்கம் அமைக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2 comments:

  1. இந்த முயற்சி வெற்றியடைந்தால் நாட்டின் கடைசி அழிவும் நாசமும் ஆரம்பிக்கும் முதல் கட்டம் ஆரம்பமாகப் போகிறது என்பதுதான் அர்த்தம்.

    ReplyDelete
  2. Latest News - All Muslim Candidates contesting under SLFP have withdrawn from contesting the LG election, following this statement.

    ReplyDelete

Powered by Blogger.