January 17, 2018

ஜனாதிபதி நன்றி மறந்தவர் - மரிக்கார் மீண்டும் தாக்குதல்


-சத்துரங்க பிரதீப்-

அனைத்து விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய உதவியையும் அர்ப்பணிப்பையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்துவிட்டாரா எனச் சந்தேகிப்பதாக, ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மாணிக்கமுல்ல பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதியின் மீது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்துவரும் மரிக்கார் எம்.பி, இவ்விமர்சனத்தையும் வழங்கினார்.

"அவர் ஜனாதிபதியாகுவதற்கு முன்னரே, அவரது ஜனாதிபதிப் பதவிக்கு நாம் உதவினோம்" என, அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தாங்கள் செய்தவை குறித்து, நன்றியறிதலுடன் இல்லை எனவும் அவருக்கு ஞாபகம் இல்லை எனவும் தாங்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டதோடு, ஜனாதிபதியின் மனச்சாட்சியிலிருந்து அந்த நன்றியறிதலைத் தேட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு உதவியவர்கள் போன்று கதைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

"தேர்தலில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு, எம்மைத் தவிர யாரும் உதவவில்லை. அவர்களுடைய வாலில் நாங்கள் தொற்றிக் கொண்டது போல அவர்கள் கதைக்கின்றனர். எங்களுடைய சாரங்களில்தொங்கிப் பிடித்தபடி நல்லாட்சி அரசாங்கத்துக்குள் தாங்கள் எப்படி வந்தார்கள் என்பதை, அமைச்சர்களான டிலான் பெரேராவும் சுசில் பிரமஜயந்தவும் மறந்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக் கொண்டுவந்தவர்கள் நாங்கள் தான்" என்று, மரிக்கார் எம்.பி குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை மறந்தோருக்கு, பெப்ரவரி 10ஆம் திகதி (உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்), ஐக்கிய தேசியக் கட்சியினர் பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

"அமைச்சர் டிலான் பெரேரா வெளியிடும் அறிக்கைகளைப் பார்த்து, எமது பிரிவினர், வாயடைத்துப் போய் நிற்கின்றனர். நாங்கள் வாயடைத்துப் போய் நிற்கத் தேவையில்லை. இராஜாங்க அமைச்சர் செய்வது போல, நாமும் பதிலடி வழங்க வேண்டும்" என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

5 கருத்துரைகள்:

கௌரவ மரைக்கார் அவர்களே!

ஜனாதிபதி உங்கள் கட்சிக்காரர்களின் கொள்ளையடிப்பை பார்த்திட்டு கைகட்டி வைபொத்திட்டிருந்தால் அவர் நல்லவர். உங்கள் கட்சிக்காரர்களுக்கு ஏதும் சொல்லாமலிருத்தால் நன்றியுள்ளவர் அப்படியா?
ஏன் சேர் இப்படியெல்லாம் நீதி நியாயமான முறையில் நடந்துகொள்ளுங்கள் சேர். நீங்கள் வளர்த்து வரும் அரசியல்வாதி இப்பொவேரிந்தே நேர்மை, நீதி, நியாயம், அன்பாக நடந்துகொள்ளுங்கள் அப்பதான் நீங்கள் எதிர்காலத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியான அரசியல்தலைவராக உருவாகுவீர்கள்.முதலாளிகளுக்கு போரடிப்பதை விட்டுவிட்டு பழைய சாக்கடையிலிருந்து தூய்மையான அரசியலுக்கு வாருங்கள். ஏனனில் நீங்கள் இளம் அரசியல்வாதி நல்லதுக்கு மட்டுமே ஒன்றுபடுங்கள்,அநியாயத்தை எதிருங்கள். அப்பதான் நீங்கள் ஒரு முன்மாதிரி அரசியல் தலைவருவீர்கள்.

நன்றி சேர்.

எதிர்காலத்தில் நல்லதை எதிர்பார்க்கும் அளவு மரிக்காரின் நடத்தைகள் தென்படவில்லை. மேல் உள்ள கருத்தை நானும் ஆதரிக்கின்றேன்.

It is not the fault of President to punish those corrupt politicians who are UNP,SLFP or any other party.Yes he did right thing appointing a commission to probe bond scam.But he failed to punish those former government politicians who are involved multi billion dollar fraud.

There are 34 cases file already in his office pending for prosecution but none of them send to AG office for prosecution simply because they are SLFP politicians.So there are some truth what Marikkar says.If he is really going against corrupt politicians he should take action to both party politicians.

The matter is not that My3 is right or wrong....maha janangale...

Why he took first this Bond issue than other all pending of 34 files....???...What he wanted to do on these last 3 years...?
So, How he claim he is right... with back of Sirasa News first...?

Hey Gents, Maithiri given chance to UNP to take action against Former government fraud politicians. Low And order and justice ministry still still with UNP. so what is the problem to take action. why still waiting for 3 years. because UNP don't like to take actions against to them. because both party have fraud politicians. then My3 start to punish them. that's good way. so now what is the problem for UNP? UNP need to give full support to President to destroy all of fraud.

Post a Comment