Header Ads



உலக சாதனை படைத்த, இலங்கை வீரர்


19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் இலங்கை வீரர் ஹசித போய­கொட 191 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

U19 உலக கிண்ண தொடரில், இலங்கை அணி கென்யாவுடன் மோதியது.

முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய இலங்கை அணியில், ஹசித போய­கொட அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் ஷாட்டுகளை அடித்து விளையாடிய ஹசித, 39 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தினை தொடங்கியவர், U19-யில் புதிய வரலாறு படைத்தார். 152 பந்துகளை சந்தித்து 191 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதில், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 28 பவுண்டரிகள் அடங்கும்.

இதன் மூலமாக, U19-யில் ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், Jakob Bhula-வின் சாதனையையும் முறியடித்தார்.

ஹசித, பெரும்பாலும் 'Front Foot Stroke' ஷாட்டுகளையே விளையாடினார்.

இந்த போட்டியில் இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 419 ஓட்டங்களை குவித்தது. மேலும், கென்ய அணியை 108 ஓட்டங்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

2 comments:

  1. இது அரை இறுதிப் போட்டியல்ல, plate என சொல்லும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகாத அணிகள் மோதும் போட்டி

    ReplyDelete
  2. This match is not quarter final,srilanka is already out of competition.This match is 9th place competition.

    ReplyDelete

Powered by Blogger.