Header Ads



வங்கியின் பணியாற்றுபவரை, திருமணம் செய்யக்கூடாதென பத்வா

வங்கி அதிகாரிகளை திருமணம் செய்ய ஃபட்வா.. கொல்கத்தா : வங்கியில் பணியாற்றுவோரையோ அல்லது குடும்பத்தில் யாரேனும் வங்கிப் பணியில் இருந்தாலோ அவர்களுடன் திருமணம் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று கொலகத்தாவில் இஸ்லாமிய மதகுரு ஃபட்வா கொடுத்துள்ளார். 

இதற்கு வங்கி ஊழியர்கள் அமைப்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

 தரூர் உலூம் தியோபந்த் என்ற மதகுரு அண்மையில் இஸ்லாமியர்களுக்கு ஃபட்வா ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில் வங்கிப் பணியின் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் மற்றும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வங்கிப் பணியில் இருந்தால் அவர்களுடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. 

வங்கியில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதால் அதில் இருந்தே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதால் இந்த ஃபட்வா கொடுக்கப்பட்டுள்ளது. 

வங்கிப் பணியாளர்களைத் தவிர்த்து தயாள குணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் திருமண பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று அந்த மதகுரு அறிவுறுத்தியுள்ளார். 

நிஜ வாழ்வில் விலகி நிற்பவர்கள் இந்த ஃபட்வா குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய வங்கிகள் சங்கம், இது போன்ற அறிவிப்புகளில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை, எனினும் இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதே போன்று அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கமும், உண்மையில் இந்த ஃபட்வா மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே விளங்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது. 


tamil.oneindia

2 comments:

  1. வங்கியில் அல்ல வட்டியுடன் சம்பந்தப்பட்டவர்களை முஸ்லிம்கள் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கணும்
    அதாவது வட்டி பெரும் பாவம், பெரும் பாவம் செய்பவர் அந்த பாவத்தை செய்கிறபோது முஸ்லிமாக இருப்பதில்லை என்ற ரசூல் ஸல் அவர்களின் கூற்றுக்கு இணங்க
    வட்டியுடன் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிமாக இல்லை (அதில் இருந்து தவ்பா செய்யும் வரை) ஆக முஸ்லிம்கள் .........

    ReplyDelete
  2. Yes its true if think deeply because of all banks are running under the bank interest.

    ReplyDelete

Powered by Blogger.