Header Ads



முதலமைச்சர் குற்றவாளியானால், தயவுதாட்சயம் இல்லை - மைத்திரி எச்சரிக்கை

பதுளையில் பாடசாலை அதிபரை முழந்தாளிடச் செய்த சம்பவம் குறித்தான விசாரணைகளில் ஊவா மாகாண முதலமைச்சர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதில் சமரசத்துக்கே இடமில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பாடசாலை அதிபர் முதலமைச்சரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய விவகாரம் அரசியலிலும் கல்வித்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவாகரத்துக்கு நீதிகேட்டு போராடிவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷûடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுநடத்திய ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும் கேட்டறிந்து கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக இந்தத் தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்த ஜனாதிபதி, இந்த விசாரணைகளில் முதலமைச்சர் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தயவுதாட்சண்யம் காட்டப்படமாட்டாதென்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான செயற்பாடுகளுக்கு எனது ஆட்சியில் இடமளிக்கப்போவதில்லை. தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும். நான் உரிய நீதியை வழங்குவேன்'' என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளாரென அறியமுடிந்தது.

1 comment:

  1. This acceptable Decision. You are Welcome sir.

    ReplyDelete

Powered by Blogger.