Header Ads



பிரதமரை பதவிநீக்க முடியாது - ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றி புரிதல் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைந்து கொண்டு புதிய புதிய பிரதமருடன் அரசாங்கம் ஒன்றை நியமிக்க முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய தற்போது பிரதமர் தனது சுய விருப்பத்தின் பேரில் பதவி விலகினால் மாத்திரமே புதிய பிரதமரை நியமிக்க முடியும் என முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அமுலில் இருந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 47வது பந்திக்கு அமைய ஜனாதிபதிக்கு அமைய ஜனாதிபதி விரும்பியபடி பிரதமரை நியமிக்க முடியும்.

19வது திருத்தச் சட்டத்தின் 46 (2) பந்திக்கு அமைய தற்போதைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தால் மாத்திரமே புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

இதனால், ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் புரிதல் இல்லாமல் கருத்து வெளியிட்டு வருவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த மைத்திரிட்ட போய் சொல்லுங்க - இந்த நாட்டை அழிச்சது ஊழலும் மோசடியும் என்றால் - அதைவிடவும் பல பல மடங்கு அழிச்சது இனவாதம்தான் என்பதை இந்த மைத்திரி மறந்திட்டாரா என்று கேளுங்க.

    இவர்ர கண் முன்னால இந்த ரென்டு முணு வருசமா இனவாதம் தலைவிரிச்சு ஆடிச்சே - சிறுபான்மை மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டாங்களே - அப்பவெல்லாம் இவர் மயிர புடிஙகிக்கிட்டு இருந்துட்டு இப்ப மட்டும் பெரிசா கதைக்க வந்துட்டாரே ???

    இப்ப எங்க அந்த இனவாதிகள் - ரென்டு மாசமா ஆக்கட சத்தமே இல்லையே .............. ஆக............. அவனுவ அடங்குறதும் ஆடுறதும் இந்த மைத்திரியோட ஆடர்லதான்டு மட்டும் நல்லா புரியுது................

    ReplyDelete

Powered by Blogger.