Header Ads



முஸ்லிம்கள் பற்றி, விழிப்பாக இருக்க வேண்டும் - யோகேஸ்வரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கொண்டு லண்டனுக்குச் சென்று அங்கு புலிகளின் பெயரை வைத்து உழைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தற்போது சூரியன் சின்னத்தில் வந்திருக்கின்றார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசசபைக்கு கூட்டமைப்பின் சார்பில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் த.கிருபைராசா என்பவரின் அலுவலகம் வாகனேரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களின் முக்கியமான கட்சி. தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தினுள்ளும், வெளியிலும், சர்வதேசத்திலும் பேசிக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்ற சூரியன் சின்னம் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி காண்பது தான் வழக்கம்.

தமிழினத்திற்கு துரோகம் செய்தது இந்தச் சூரியன் சின்னம் என்ற வகையில் மக்கள் இதனை நிராகரித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் தானாகப் பிரிந்து சென்றார்கள்.

அவர்கள் இந்தச் சூரியன் சின்னத்தை ஆனந்த சங்கரியிடம் கடனாகப் பெற்று இந்தத் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கொண்டு லண்டனுக்குச் சென்று அங்கு புலிகளின் பெயரை வைத்து உழைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தற்போது சூரியன் சின்னத்தில் வந்திருக்கின்றார்.

நாடு கடந்த தமிழீழம் கேட்டு புலிகள் தான் எங்கள் தலைவர்கள் என்று இருந்தவர்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இருந்து புலிகளைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைச் செய்தார். பின்னர் நிலைமை சீரானதும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவரை இங்கு எடுத்தது.

வெட்கம் கெட்டவர்கள், தமிழ் இனத்தை விற்றுப் பிழைத்தவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கலாமா? கொள்கையில்லாதவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழர் சின்னம் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

வாகனேரி பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஒட்டகச் சின்னத்தில் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு எந்த முஸ்லிம்களும் வாக்களிப்பதில்லை.

நான் நினைக்கின்றேன் வாகனேரியில் அவர்களுக்கு வாக்களித்தால் அரைவாசி பூமியை சுருட்டி விடுவார்கள். அவர்கள் இப்போது திட்டமிட்டு உள்ளே வந்து கொண்டிருக்கின்றார்கள் இந்த விடயத்தில் அனைவரும் விழிப்பாக இருந்து ஏனையவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

2 comments:

  1. நாடாளு மன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களின்
    மேற்படி கருத்துக்கு நீங்கள் வழங்கிய
    தலைப்பு பொருத்தமற்றது என எண்ணுகின்றேன்.முஸ்லீம்
    காங்கிரஸ் வேறு முஸ்லீம்கள் வேறு
    முஸ்லீம் காங்கிரஸை முற்றாக நிராகரித்த முஸ்லீம்கள் பலர் இருக்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸின் இவ்வாறான நரிப்புத்தி
    ஏராளம். அவர்களது செயற்பாடுகள்
    ஏனய சமூகத்தவர் மத்தியில் முஸ்லீம்களுக்கு அவப்பெயரயே சம்பாதித்து தந்துள்ளது. எனவே ஊடகலாளராகிய நீங்கள் இவ்வாறான
    விடயங்களில் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    மேலும் முஸ்லீம்கள் என்பதற்கு திலாக
    முஸ்லீம் காங்கிரஸ்கார்கள் எனவந்தால் பொருத்தம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம் கட்சியே இல்லை....

    ReplyDelete

Powered by Blogger.