Header Ads



ரணிலை நீக்க திட்டம், சிங்கள இணையம் தகவல்


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும் இரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும், பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டை பிரதமர் மீது சுமத்தி, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரை பதவியில் இருந்து விலகி விட்டு,

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க அந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவை மாத்திரமல்லாது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய செயலாளர் ஒருவர் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஒருவரும் தலையீடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.