Header Ads



தெரணியகலவை அச்சுறுத்துவது புலியா, சிறுத்தையா..??


தெரனியகல பிரதேச மக்களை புலியொன்று அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹாதென்ன, நூரியாவத்த, மராவத்த, பொல்கஸ்வத்த ஆகிய பகுதிகளில் இந்தப் புலி சஞ்சரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் உள்ள நாய்கள் மற்றும் பன்றிகளை இந்த புலி, கொன்று வேட்டையாடி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொல்கஸ்வத்த, பஸ்னாகல ஆகிய இடங்களில் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்தப் புலி கிராமங்களுக்குள் புகுந்து நாய்களை வேட்டையாடி சென்றுள்ளது.

இதன் காரணமாக பெருந்தோட்டங்களில் பணியாற்றி வரும் அப்பாவி தொழிலாளிகள் பெரும் பீதியடைந்துள்ளதுடன், அவர்களது பணியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரனியகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே. தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் பகலில் வந்து தேடிய போது புலி இருக்கவில்லை எனவும், இரவிலேயே புலி சஞ்சரிப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பிரதேசத்தை அச்சுறுத்தி வருவது புலி என பிரதேச மக்கள் கூறி வருகின்ற நிலையில் இது சிறுத்தையாக இருக்கலாம் என வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.