Header Ads



போட்­டி­யிட முடி­யா­த­வர்­களை நாம் கைவிட மாட்டோம், உரிய இடத்தை நாம் வழங்­குவோம் - கபீர்

தேர்தல் விஞ்­ஞா­பனம்  தொடர்­பான  நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தும் நடை­பெ­று­வ­தால் எதிர்­வரும் 22 ஆம் திக­திக்கு பின்­னரே தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­டப்­படும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இம்­முறை போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கா­த­வர்­களை நாம் கைவி­ட­மாட்டோம். அவர்­களுக்கு எதிர்­கா­லத்தில் உரிய இடத்தை  வழங்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யாக முதல் கிராம மட்­டத்­தி­லான கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை நாம் உரிய முறையில் முன்­னெ­டுத்தோம். இதனால் கிரா­மத்­திற்கு தகு­தி­யா­ன­வர்­களை நாம் களத்தில் இறக்­கி­யுள்ளோம். எனினும் எமக்கு அதி­க­மான விண்­ணப்­பங்கள் கிடைத்­த­மை­யினால் பலரை வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­து­வ­தற்கு முடி­யாமல் போனது. ஏனெனில் ஒரு வட்­டா­ரத்தில் ஒரு­வரை மாத்­தி­ரமே எம்மால் கள­மி­றக்க முடியும். 

எனினும் இம்­முறை போட்­டி­யிட முடி­யா­த­வர்­களை நாம் கைவிட மாட்டோம்.  அவர்­க­ளுக்கு உரிய இடத்தை நாம் வழங்­குவோம்.

மேலும் தேர்தல் விஞ்­ஞா­பன நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னரே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.