January 02, 2018

பேருவளை சுப்பர் மார்க்கட்டில், நடந்து என்ன..?

– ரூமி ஹாரிஸ் –

பேருவளை நகரில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் கிளையொன்றில் நேற்று மாலை (01/01/2018) , பேருவளை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் (சகோதரனும், 18 வயது சகோதரியும்) பொருட்களை வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் அதற்கான பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ”உங்களைச் சோதனை செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் பொருட்களை திருடியுள்ளதாக வாடிக்கையாளரொருவர் எங்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்” என காவலாளியொருவர் அந்தச் சகோதரியை மீண்டும் உள்ளே அழைத்துள்ளார். ”நாங்கள் திருடவில்லை” என இருவரும் கூறியபோதும் அவர்கள் பலாத்காரமாக அச்சகோதரியை உள்ளே அழைத்துச்சென்று பெண் காவலாளி ஒருவர் சோதனையிட்டுள்ளார். அச்சகோதரியின் நிகாப் (முகத்திரை) மற்றும் ஹபாயாவை கழற்றியே அப்பெண் காவலாளி சோதனையிட்டுள்ளார். சோதனை நடவடிக்கைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான திருட்டு பொருட்கள் எதுவுமில்லை எனக் காவலாளி கூறியுள்ளார்.

இவ்வாறு வீணாக மானபங்கப்படுத்தப்பட்டதன் காரணமாக அச்சகோதரி உள நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். இதன் காரணமாக குறித்த சுப்பர் மார்க்கட்டில் இருந்த ஏனைய முஸ்லிம் வாடிக்கையாளர்களும் இதற்கெதிராக நிர்வாகத்திடம் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதன்போது ஸ்தலத்திற்கு பேருவளை பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இத்துரதிஷ்டமான சம்பவத்தை அடுத்து விடுமுறையில் சென்றுள்ள கிளை முகாமையாளர் குறித்த சகோதரியின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பேருவளை நகரில் அமைந்துள்ள குறித்த பிரபல சுப்பர் மார்க்கட் கிளை அண்மையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பேருவளை முஸ்லிம்களே பெரும்பாலான வாடிக்கையாளர்களே உள்ளனர். இதன் காரணமாக பேருவளையில் குறித்த சுப்பர் மார்க்கட் கிளையை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டுமெனச் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் முன்னெடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

22 கருத்துரைகள்:

மானபங்கப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்று ஹபாயாவைக் கழற்றி சோதனைப்படுத்திய பின்னரும்.. ஏன் சுப்பர் மார்க்கெட்டின் பெயரை குரிப்பிடத் தயங்குகிரீர்கள்..?

Please publish name of supermarket

நாங்கள் அத்தகைய செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதுமட்டுமன்றி அந்த சுப்பா் மார்கட்டைக் கண்டிப்பாக முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் எல்லா முஸ்லிம்களைக் குறிப்பாகவும் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கும் அனைவரையும் இந்த சுப்பர் மார்க்கட்டைப் புறக்கணிக்குமாறு பணிவாக அழைக்கின்றோம்.

Beruwala Keells super market

Nicchayamaha inthe supermarkattai purakkanittal eanayavarhalukum ithu oru padamaha amaum.

மான நஷ்ட வழக்கு போட்டு அவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க முடியாதா

All muslim should boycott Beruwala "KEELS SUPER" Because tomorrow it is happens your sister or brother.may Allah save all Muslims.

https://www.google.ae/maps/@6.4747699,79.9836115,3a,75y,236.65h,96.05t/data=!3m6!1e1!3m4!1sdkTnlcTK8nFeM4YZ2u-gCQ!2e0!7i13312!8i6656?hl=en

பேருவளை keells super யில்
நடந்தது என்ன ?

நேற்று (1/01/2018)இரவு பேருவளை
keells super market யில் பொருட்
கொள்வனவு செய்து கொண்டு,
பணம் செலுத்திவிட்டு வெளியேறப்
போன முகம் மூடி ஆடையணிந்த
முஸ்லிம் மாணவியொருவரைப்
பெண் ஊழியர் ஒருவர் வந்து
உங்களைப் பரிசோதிக்க வேண்டும்
என கையைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறாள்.

நான் எதையும் தவறாக எடுக்கவில்லை
யென எவ்வளவு சொல்லியும் கேட்காமல்
வழுக்கட்டாயமாக அழைத்துச் செல்லவே,
உடன் சென்ற 18 வயது மதிக்கத்
தக்க சகோதரன் உடனே தந்தைக்கு
தொலைபேசியில் சொல்லி இருக்கிறார்.

தந்தை வந்து சேருவதற்கிடையில்,
(க.பொ.த (உ/த) பரீட்சை எழுதிய )
அந்த மத்ரஸா மாணவியை பரிசோதனை
செய்தவர்கள் வந்து,மன்னிக்க வேண்டும்
இவர் பணம் கொடுத்து வாங்கிய
பொருட்கள் தான் இவரிடம் இருக்கின்றன
எங்களுக்குக் கிடைத்ததொரு தகவலின்
அடிப்படையிலேயே check பண்ணினோம்
என்று சொல்லவே அந்த இடத்தில் இருந்த பத்துப் பதினைந்து முஸ்லிம்களும் அவர்களோடு வாய்த்
தர்க்கத்தில் ஈடுபட,அந்த மாணவியின்
தந்தையும் வந்து ஏசவே ஊழியர்கள்
அந்த தந்தையை அடிக்க வந்ததோடு
இனரீதியான வார்த்தைப்
பிரயோகங்களையும் செய்தார்கள்
என்று,இந்தச் சம்பவங்களைச் சொன்ன
பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை
சொன்னார்.அவசியப்பட்டால்
ஆட்களை இனம் காட்டவும் முடியும்
என்றார்.

ஒரு சிங்கள வாடிக்கையாளர் சொன்ன
பொய்யை நம்பி ஊழியர்கள் செய்த
முட்டாள்தனத்தால் இரு இனங்கள்
keels க்குள் முட்டி மோதிக்கொள்ளப்
போவதை அவதானித்த நிர்வாகம்
வாயிற்கதவை இழுத்து மூடிவிட்டு
பொலிஸை வரவழைத்தது.என்றாலும்
நிலமை மோசமடையவே இது இனக்கலவரமாக உருவெடுக்குமோ என
அஞ்சிய மாணவியின் தந்தை தன்
மகளை அழைத்துக் கொண்டு வீடு
சென்றுள்ளார்.

விடிவதற்குள் whatsApp,face book
வழியாக எங்கும் செய்தி பரவி விட்டதை
உணர்ந்த keells super யின் தலைமை
பீடம் சில உயர் அதிகாரிகளிடம்
பழவர்க்கங்களையும்,பரிசிப் பொருட்
களையும் கொடுத்து அம்மாணவின்
(பேருவளை) மருதானை வீட்டுக்கு
அனுப்பி மன்னிப்புக் கேட்டது.
(மன்னிப்புக் கேட்க வந்வர்களது
புகைப்படங்களை இணைத்துள்ளேன்).

இதில் சம்பந்தப்பட்ட பட்ட அனைவரும்
பகிரங்க மன்னிப்புக் கேட்டு சமூக வளைதளங்களில் வீடியோ வெளியிடா
விட்டால்,ஜும்மா பள்ளியில் அறிவித்து
keels super க்கு மக்கள் வருவதைத்
தடுப்போமென பாதிக்கப்பட்ட தரப்பால்
சொல்லப்பட்டுள்ளது.

"அந்த Girl -keels க்குள் அழுத அழுகை
என்னால் சகித்துக் கொள்ளவே
முடியவில்லை"என்று சம்பவ இடத்தில்
நின்ற ஒருவர் என்னிடம் சொன்னார்.

நான் மேலே எழுதியிருக்கிற அனைத்தும்
சம்பந்தப்பட்டவர்களோடு
தொடர்பு கொண்டு தீர விசாரித்து எழுதப்
பட்டவையே.

* Nabhan Shihabdeen
Beruwala.
2/1/2018.

Apologi not the remedy. File case to get compensation.
In some countries law says. You can't blame the customer not paying, by simply the customer went and paying one item at the counter. Basically if customer intenton is not to pay, he forgot to pay and the customer assistance didn't ask the customer.
Don't leave it get compantation.

I think the Security staff doing their duty. Thieves and robbers are using the same kind of dress to steal and Rob the banks and shops. The picture shows that the sister's face is completely covered. Since she is with her brother, obviously they must have suspected and checked. This is normal. Please do not make this a big issue and feed the racists. Plead forgive and ALLAH will give peace and Hidayat to non believers. In this current situation especially during the local elections, Muslims should be very patient like teaching of Rasulullah . U are saying to boycott the supermarket. But remember this. What will happen the whole Sri Lanka boycott Muslims establishment and shops and restaurants. Who will we sell our things and services. PLEASE BE PATIENT FOR ALLAH AND RASULULLAH SHAKE AND FORGIVE THIS INCODENT AND DO NOT PROVOKE.

பொய் முறைப்பாடு செய்தவனை தன்டிக்க வேண்டும்

Let us be objective. 1. According to news report she was checked because of a complaint by a another customer which was inappropriate because
with security cameras around management should take it's decisions and take responsibility for those decisions.
2. The checking was embarrassing but was done appropriately by a female guard.
3. Their have been incidence of illegal activities by various people disguised as Muslim women.

Parent of affected girl should insist the Keel super management to give them an undertaking that this mistake was done due to the blind trust of so called customer against this girl, so you may ask them to give them an undertaking that this mistake was done due the irresponsibility of the KEELS MANAGEMENT. This would help us in future. This is for the special attention of the parents or relatives of the affected girl.

CCTV கெமரா இருந்தால் முறையிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும்

Push to managment to remove that staff from the super market

Post a Comment