Header Ads



ரவி நீக்கப்படுவார் - கபீர் அறிவிப்பு

முன்னாள் நிதி தமைச்சர் ரவி கருணநாயாக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் அறிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் வரையில், ரவி கருணாநாயக்கவை கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு திலக் மாரப்பன குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ரவி கருணாநாயக்கவோ அல்லது கட்சியின் வேறு உறுப்பினர்களோ இதில் தொடர்புபட்டதாக சுட்டிக்காட்டப்படவில்லை.

எனினும், மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்துடன் ரவி கருணாநாயக்க தொடர்பு பேணியதாக குறிப்பிடப்பட்டுள்ளதனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் ரவி கருணாநாயக்கவை கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த கட்சியின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

2 comments:

  1. பச்சை நீலத்தில் உள்ள சிறிசி பெரிசி எல்லோரும் சோ்ந்து முழுப்பூசணிக்காரயை சோற்றில் மறைக்க முயற்சி செய்கின்றார்கள். சாத்தியமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. சாத்திமே இல்லை,குற்றவாளிகள்
    யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே
    தீருவார்கள்.விடயம் உலகம் வரை
    பரவி விட்டது

    ReplyDelete

Powered by Blogger.