Header Ads



"நாய் கடித்­த­வர்­களை போன்றும், பாம்பு விஷ­மே­றி­ய­வர்­களை போன்றும் தடு­மா­று­கின்­றனர்"


மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு எதி­ராக முதலில் நட­வ­டிக்கை எடுத்­தது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். ஆகவே,உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் எமக்கு எந்­த­வொரு பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது. அத்­துடன் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ரா­னாலும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம். இது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் பூரண ஆத­ரவு நல்­குவோம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

மேலும் 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை­யான பிணை­முறி வழங்­கலில் பாரிய மோசடி நடந்­துள்­ளது. இது குறித்து உடன் நட­வ­டிக்கை எடுக்க தலை­மை­க­ளுக்கு நாம் அழுத்தம் பிர­யோகம் செய்வோம். 20 வரு­டங்கள் மோசடி செய்து விட்டு தற்­போது நாய் கடித்­த­வர்­களை போன்றும் பாம்பு விஷ­மே­றி­ய­வர்­களை போன்று கூட்டு எதி­ர­ணி­யினர் தடு­மா­று­கின்­றனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சார நிலைமை குறித்து வின­விய போதே அவர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்­னைய ஆட்­சியின் மோச­டி­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்க மாத்­திரம் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­த­வில்லை. தற்­போ­தைய ஆட்­சியில் நடக்கும் ஊழல் மோச­டிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வுமே நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம். இதன்­படி மத்­திய வங்கி மோசடி தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் எழுந்­த­வு­ட­னேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குழு­வொன்றை அமைத்து விசா­ரணை செய்தார். 

அதன்­பின்னர் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி தலை­மை­யி­லான கோப் குழு­விலும் விசா­ரணை செய்தோம். இந்த விசா­ர­ணைகள் அனைத்­திற்கும் நாம் பூரண ஆத­ரவு வழங்­கி­யது மாத்­தி­ர­மின்றி அந்த விசா­ர­ணைகள் அனைத்­தையும் ஐக்­கிய தேசியக் கட்­சியே ஆரம்­பித்­தது. 

என்­றாலும் தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மீதும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இந்த குற்­றச்­சாட்­டு­களை ஏற்க முடி­யாது. நாம் ஊழல் மோச­டி­களை மறைக்க வேண்­டு­மாயின் விசா­ரணை குழு­வி­னையோ அல்­லது கோப்­குழு விசா­ர­ணை­க­ளையோ ஆரம்­பித்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எனினும் நாம் பூரண விசா­ர­ணைக்கு அடித்­த­ள­மிட்டு தற்­போது குறித்த விசா­ர­ணைகள் யாவும் சட்­டமா திணைக்­க­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

  நாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேல­தி­க­மாக விசா­ரணை செய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை அமைத்தார். எனினும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ராலும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம். இவ்­வா­றான சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாம் பூரண ஆத­ரவு வழங்­குவோம்.

அத்­துடன்  மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு எதி­ராக முதலில் நட­வ­டிக்கை எடுத்­தது ஐக்­கிய தேசியக் கட்­சி­யாகும். கோப் குழு விசா­ர­ணையை அடுத்து பெப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் 12 பில்­லியன் ரூபாவை அரச மயப்­ப­டுத்தி அந்­நி­று­வ­னத்தின் நிதி பயன்­பா­டு­களை மொத்­த­மாக இரத்து செய்தோம். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் எந்­த­வொரு பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது. 

அது­மாத்­தி­ர­மின்றி சுமார் 20 வரு­டங்­க­ளாக ஆளும் கட்­சியில் அமர்ந்து கொண்டு பாரி­ய­ள­வி­லான மோச­டிகள் செய்து மக்­களை ஏமாற்றி விட்டு பிணைமுறி விவகாரத்தில் நாய் கடித்த, பாம்பு விஷமேறியவர்களை போன்று தடுமாறுகின்றனர். 2008 முதல் 2015 வரை 4702 பில்லியன் ரூபா பிணைமுறி மோசடி நடந்துள்ளது. எனவே தற்போதைய ஆட்சியின் மோசடிகள் கடுமையான அவதானம் செலுத்துவதனை போன்று முன்னைய ஆட்சியின் பிணைமுறி விநியோகம் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

No comments

Powered by Blogger.