January 04, 2018

தலித் என்பதால் காலணிகளை, நாக்கால் சுத்தம்செய்ய வைத்த போலீசார்

குஜராத் மாநிலம் அம்ராய்வாடிவை சேர்ந்தவர் ஹர்ஷத் ஜாதவ். 40 வயதான இவர்  தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த  டிசம்பர் மாதம் 29 ம் தேதி அம்ராய்வாடி மாவட்ட காவல் நிலையத்தில் கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹர்ஷத் காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கூறப்படுள்ளதாவது: நான் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் பணியைச் செய்து வருகிறேன். டிசம்பர் 29 ம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோயிலில் கூட்டமாக இருந்ததால், அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சென்றேன். இங்கு என்ன நடக்கிறது என ஒருவரிடம் கேள்வி கேட்டேன். நான் கேள்வி கேட்ட நபர் ஒரு கான்ஸ்டபிள் என பிறகுதான் தெரிந்தது. அதற்கு என்னை திட்டி அடித்தார். 

அதன் பிறகு அங்குள்ள காவல் நிலையத்துக்கு என்னை அழைத்துச்சென்று சிறையில் அடைத்தார். சிறிது நேரம் கழித்து உயர் அதிகாரி கிம்கார் சிங் அங்கு வந்தார்.  வந்தவர் என்னிடம் ஒரு போலீஸ்காரரை எப்படி நீ தாக்கலாம் எனக் கேட்டார். பின்பு  ‘உன் ஜாதி என்ன  என்று கேட்டார்.  போலீஸ் அதிகாரி  பின்னாள் இருந்த போலீஸ்காரர் , ‘தலித்’ என்று கூறினார். தலித் என்று சொன்னதும் அதிகாரிக்கு  கோபம் அதிகரித்தது. கான்ஸ்டபிள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க சொன்னார். கான்ஸ்டபிள் காலணி மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் இருந்த 15 போலீஸ்காரர்களின்  ‘ஷு’ க்களை நாக்கால் சுத்தம் செய்ய சொன்னார். அதன் பிறகு என்னை மிரட்டி இதை வெளியில் சொன்னால் சுட்டுக்  கொலை செய்து விடுவோம் என மிரட்டிய பிறகு என்னை வெளியே விட்டனர். போலீசார் அடித்ததை விட அவர்கள் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்யச் சொன்னது பெரிய அவமானமாக உள்ளது. 

அதை   செய்ததால் வழக்கு ஏதும் போடாமல் என்னை வெளியே விட்டனர். இல்லை என்றால் பொய் வழக்கில் உள்ளே இருந்திருப்பேன். காவல் நிலையத்தில் நடந்ததை நினைக்கும் போது பெரிய அவமானமாக இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளலாம் என  நினைத்தேன். தப்பு செய்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்து எனது முடிவினை மாற்றிக் கொண்டேன்.’ இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் புகார் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வருகிறது. போலீசார் பூட்ஸ்களை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குஜராத்தில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.

7 கருத்துரைகள்:

இந்தியா ஒரு தெற்காசியாவின் ஜனநாயக ஜாம்பவான். ஆனால் அங்கு இடம் பெறும் முறை கேடுகளையும், கேவலங்களையும் பார்க்கும் போது காறித்துப்ப தோணுகிறது.

Superstition & racism are prevalent across India. So-called Prime minister Modi & RSS, BJP terrorist are sole responsible for the rampant growth of crimes in India.
These notorious criminals must be arrested and prosecuted.
The UN must impose sanctions on India for alleged crimes against humanity in Gujarat & Kashmir.

Superstition & racism are prevalent across India. So-called Prime minister Modi & RSS, BJP terrorist are sole responsible for the rampant growth of crimes in India.
These notorious criminals must be arrested and prosecuted.
The UN must impose sanctions on India for alleged crimes against humanity in Gujarat & Kashmir.

இங்கு அந்த பரதேசிகளின் எந்த கமன்டையும் காணவில்லையே! முஸ்லீம்களை வம்பிழுக்க என்றால் முதல் கமன்ட் பதிவர்.

இதற்கு குஜ்ராத்தில் ஏன் கொந்தளிப்பு? அங்குதான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாதிவெறியெல்லாம் ஆட்சியாளர்களின் வளிநடத்தலுடன் தெருவிலேயே நடக்குமே...

இது போன்ற சில விடயங்கள் இல்லை மறை காய்கள் போல் நடக்கத்தான் செய்கின்றன .ஆனால் இவை தெரிய வந்தால் கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது .இந்திய ஊடகங்களும் விடப்போவதில்லை.ஆனால் முஸ்லீம் நாடுகளில் நடக்கும் இதை விட மோசமான சம்பவங்கள் எதுவும் வெளியே தெரிய போவதில்லை.

இது மகா காமெடி. முஸ்லீம் நாடுகளில் நடப்பது வெளியே தரியாதாம், ஆனால் இவருக்கு தெரிந்துவிட்டது.

முதலில், ராஹுல் காந்தியை கொண்றதாக நிரூபிக்கப்பட்டும் எத்தனையோவருடமாக பம்மிக்கொண்டு இருக்கும் தன்டனை வழங்க துப்பில்லாத இந்திய நீதித்துறை.

இலைமறை காயா? ஓடும் பஸ்ஸில், ரயிலில் கற்பழிப்பு, கற்பிணியை கற்பழிப்பு, கொலை, கொள்ளை, கருச்சிதைவு என அடுக்கலாம். இது இலைமறை காயா?

ஊடகங்கள்: மக்களிடையே பிரபலமாக தமது அம்மாவையும் செய்திக்கு கொண்டுவருவார்கள். கணவன் மனைவி கட்டிலில் செய்ததை டீவியில் பேட்டி எடுப்பது, இடையிடையே விளம்பரம் என சுயலாபத்துக்கு எதையரம் செய்யும் வேசிஊடகங்கள்.

( இந்திய கடும் தண்டணையை பற்றி சற்று விளக்கவும்???)

இம்ரானின காமன்டைகண்டு கொக்கி குமார் " பக்கி குமார் ஆகிவிட்டார் போலும்.
குமார், அந்த சந்தர்பால், அஜன் இவர்கள் இந்தியாபோனால் இவர்களின் நிலையும் தலித்களின் நிலைதான்.

Post a Comment