Header Ads



கிழக்கில் உள்ளவர்கள் மடையர்களா..? ARM ஜிப்ரி

கிழக்கு மாகாண மக்கள் அடிமைகள் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பின் முன்னாள் பிரதி தலைவர் சபீக் நஜாப்தீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைமையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.

 மட்டக்களப்பு - வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் தையூப் என்பவரை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நீர்வழங்கல் வடிகாலமைப்பின் பிரதி தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் நஜாப்தீன் என்ன சொன்னார் நாங்கள் தான் தலைமை தாங்குபவர்கள் நீங்கள் எங்களுக்கு வாக்கு வழங்குபவர்கள் நீங்கள் அடிமைகள், கிழக்கு மாகாண மக்களை கேவலப்படுத்தி முகநூலில் விட்ட அறிக்கையின் பின் தனது பதவியை இராஜினாமா செய்து பகிரங்க மன்னிப்பு கேட்டு நாடகம் நடாத்தப்பட்டது.

அவருடை மனதில் மட்டுமல்ல அந்த கட்சி தலைமையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றது. இவரது இராஜினாமாவின் போது அந்த இடத்திற்கு முன்னாள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை நியமித்தார்கள்.

ஏன் கிழக்கு மாகாணத்தில் ஒரு மகன் கிடைக்கவில்லையா? கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து மடையர்களாக இருக்க வேண்டுமா? கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இந்த நாட்டில் வடகிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இனியும் தலை குனிந்து வாழ முடியாது. தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

அப்படியானால் றிசாட் பதியூதினை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். வாழைச்சேனை பிரதேச சபை நான்கு வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அதிக படியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விகிதாசர பட்டியலிலும் மூன்று ஆசனங்களை பெற வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.