Header Ads



ஊழல் பற்றி விவாதிக்க 6 இல் கூடுகிறது பாராளுமன்றம்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நடத்துவதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றின் மீது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்துவது தொடர்பில் முற்பகல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த் இணக்கப்பாட்டின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் நாடாளுமன்றம் கூடும் திகதி தொடர்பில் அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடிகள் அறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதத்தை தேர்தல் காரணமாக ஐ.தே.கவும், பொது எதிரணியும் கலந்துரையாடி திட்டமிட்டே பிற்போட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்ததுடன், முடிந்தால் உள்ளூராட்சி சபைத்  தேர்தலுக்கு முன்னர் இந்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்துமாறு சவால் விடுத்திருந்தார்.

ஜனாதிபயின் சவாலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்குப் பணித்துள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கூறியிருந்தார். எனினும், "தேர்தலுக்கு முன்னரான இரண்டு தினங்கள் நாட்டில் அமைதியான சூழ்நிலை காணப்படவேண்டும். தேர்தலை நடத்துவதற்கு பாதகங்கள் ஏற்பட்டால் தேர்தலை மூன்று வாரங்கள் பிற்போடவேண்டிய நிலைமை ஏற்படலாம். இந்த விடயம் தொடர்பில் பேசித் தீர்மானிக்கவேண்டும்'' என்று தேர்தல்கள் ஆணையாளர் நேற்று முன்தினம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளின் பிரகாரம் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இது குறித்து இறுதி முடிவெடுக்க கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் இன்று கலந்துரையாட நேற்று சபாநாயகரின் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.