Header Ads



திருகோணமலையில் ஒரு நகர சபையையும், 6 பிரதேச சபைகளையும் கைப்பற்றுவது உறுதி - மஹ்ரூப்

வடக்கும், கிழக்கும் மீண்டும் இணைந்தால் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் - பேராறு பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரின் கரங்களை பலப்படுத்த கிழக்கு மாகாணம் தயாராகி விட்டது. கிழக்கின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றி பாரிய திருப்பமாக அமைய இருக்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு நகர சபையையும், ஆறு பிரதேச சபைகளையும் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

தலைவர் றிஸாத் பதியுத்தீனுடைய கரங்கள் எப்போதும் பலப்படுத்தப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ரவூப் ஹக்கிமோடு இருந்த அனைவரும் மக்கள் காங்கிரசோடு இருக்கின்றார்கள். காரணம் ரவூப் ஹக்கிமின் தன்னிச்சையான போக்கு.

இதன் காரணமாகவே அனைவரும் நாளாந்தம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் மாறி வருகின்றார்கள்.

வடக்கும் கிழக்கும் மீண்டும் இணையக் கூடாது. காரணம் இவ்விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் மற்றும் எதிர் விளைவுகள் காத்திருக்கின்றன. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அனைவரிடமும் பணத்தினை பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்து வருகின்றார்.

தற்போது சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டும் காலம் கனிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.