Header Ads



6 இலட்சத்து 50,000 வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன

நாட்டில் சுமார் 6 இலட்சத்து 50,000 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில், இன்றைய  -02- தினம் பணிகளை ஆரம்பித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதிமன்றங்களில் தற்போது சுமார் 6 இலட்சத்து 50,000 ஆயிரம் வழக்குகள் விசாரணைகள் பூர்த்தியடையாது நிலுவையில் உள்ளன.

வழக்குகளில் சிக்கும் சாதாரண பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் புத்தாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு ஒன்றில் சிக்கும் சாதாரண பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் நீதி அமைச்சு பல்வேறு பணிகளை மேற்கொண்டது, இந்த ஆண்டிலும் பாரியளவிலான பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

நீதி அமைச்சில் கடமையாற்றுவோருக்கு தனிப்பட்ட அரசியல் மற்றும் இன, மத விடயங்கள் இருக்கலாம் எனவும், அரசியல் அல்லது இன,மத அடிப்படையில் செயற்படக் கூடாது என அமைச்சர் அதுகோரள வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. When we compare to the cases that are pending by political protection are more than this figure and amount of lost to the country far more than this case.
    In my opinion don't give priority tobthis case rather start to process the big fat crime people?

    ReplyDelete

Powered by Blogger.