Header Ads



5,399.20 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளோம்

2017ம் ஆண்டுக்கு மத்திய திறைசேரியினால் வட மாகாணத்திற்கென விடுவிக்கப்பட்ட மொத்த நிதியும் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவுபடுத்தியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

2017ம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்து ரூபா. 6,013.48 மில்லியன் மத்திய திறைசேரியினால் பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை மத்திய திறைசேரியினால் வடக்கு மாகாண திறைசேரிக்கு விடுவிக்கப்பட்ட கட்டுநிதி ரூபா. 5,399.20 மில்லியன் மட்டுமே ஆகும். இது மொத்த நிதி ஒதுக்கீட்டின் 90% ஆகும். 

கிடைக்கப் பெற்ற ரூபா 5,399.20 மில்லியனும் (முழுமையாக 100%) அமைச்சுக்கள் திணைக்களங்களினூடாக செலவு செய்யப்பட்டுள்ளது. இவ் ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 97% சதவிகிதமான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஆகவே2017 ம் ஆண்டின் மூலதனஅபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூபா. 614.28 மில்லியன் மத்திய திறைசேரியினால் வடக்கு மாகாணத்திற்கு இன்னமும் விடுவிக்கப்பட வேண்டும். 

மேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இணை நிதியளிப்புக்களுக்கூடாக அபிவிருத்தித் திட்டங்களுக்கென வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையத்தின் அடிப்படையாக மாற்றும் செயற்றிட்டத்திற்காகவும் (TSEP),சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் (HSDP) ரூபா.675 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இவ் ஒதுக்கீட்டில் மத்திய திறைசேரியினால் 2017டிசம்பர் வரைவிடுவிக்கப்பட்ட கட்டுநிதி ரூபா.612 மில்லியன் ஆகும். இது மொத்த ஒதுக்கீட்டின் 91% ஆகும். இவ் ஒதுக்கீடு முழுமையாக செலவு செய்யப்பட்டு 97% மான பௌதீக முன்னேற்றம் அடையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே மொத்த ஒதுக்கீட்டில் ரூ 63 மில்லியன் மத்திய திறைசேரியினால் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. 

இதேவேளை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் ரூபா. 207.11 மில்லியன் ஒதுக்கீடு வௌவேறு காலப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது. இதில் 64% மான கட்டுநிதி அதாவது ரூபா.131.65 மில்லியன் டிசம்பர் மாதம் வரை விடுவிக்கப்பட்டிருந்தது. இதில் ரூபா.75.16 மில்லியன் தேசி யஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்திலிருந்து (ONUR) வடக்கு மாகாணத்திற்கு விடுவிக்கப்பட வேண்டும். இன்னும் விடுவிக்கப்படவில்லை. 

ஆகவே கொடுத்த பணத்தை நாம் செலவழிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் பேர் வழிகளுக்கு நாம் கூறுவது இது தான். நாம் கொடுத்த பணத்திற்கு மேலாகவும் உரியவாறு இது வரையில் செலவழித்துவிட்டோம். ஆனால் அரசாங்கந் தான் எமக்கு உறுதி அளித்த மொத்தப் பணத்தையும் தராதிருக்கின்றது. 

ஆகவே அரசாங்கத்திடம் ஏன் எமக்குரிய பணத்தை இன்னமும் கொடுக்கவில்லை என்று இந்தப் பேர்வழிகள் கேட்க வேண்டும். மேலும் 2016ம் ஆண்டு நாங்கள் பெற வேண்டிய பணத்தில் ரூபா 1050 மில்லியன் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அரசாங்கத்தால் எமக்கு கொடுத்து முடிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.