Header Ads



ஊழலுக்கு எதிரான ஒபரேசன் - 400 பில்லியன்களை கைப்பற்றிய சவுதி அரேபியா


சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான இளவரசர்களிடம் இருந்து சுமார் 400 பில்லியன் ரியால் கைப்பற்றியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய சவுதி அரசின் தலைமை வழக்கறிஞர் ஷேக் சவுத் அல் மொஜெப், இதுவரை கைதான இளவரசர்கள் மற்றும் முன்னாள அரசு அதிகாரிகளிடம் இருந்து சுமார் 106.7 பில்லியன் டொலர் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது கைதான இளவரசர்களின் சொத்துக்கள் மற்றும் நிதி ஆதாரம் வழியாக அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 381 பேர் கைதானதில் 65 பேர் இன்னமும் அரசின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருக்கும் இளவரசர்கள் இன்னமும் அரசு குறிப்பிட்டுள்ள தொகையை செலுத்த முன்வரவில்லை எனவும், ஏற்கெனவே அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், அவர்கள் மீதான விசாரணை இன்னமும் முடிவுறாததாலும் விடுதலையாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள Ritz-Carlton ஹொட்டலில் கடந்த நவம்பர்மாதத்தில் இருந்தே ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

கைதான இளவசர்களை இதே ஹொட்டலின் பிரத்யேக அறைகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மட்டுமின்றி அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுப்பு நிபுணர் குழு விசாரணையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே தொடர்புடைய ஹொட்டலில் ஊழல் தொடர்பில் கைதான எவரும் தற்போது இல்லை எனவும், அனைவரையும் அரசு விடுதலை செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்ஒன்று வெளியானது.

No comments

Powered by Blogger.