Header Ads



வசீம் கொலை, 3 தடவை மைத்திரியை சந்தித்தும் பயன் இல்லை - சகோதரி வேதனை

இலங்கையின் சட்டங்கள் குறித்து எவ்வித நம்பிக்கையும் கிடையாது என பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், தனது சகோதரரின் மரணம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட பலரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது தடவை சந்தித்த போது ஜனாதிபதி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கடுமையாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும், இன்றைக்கும் விசாரணைகள் ஸ்தம்பித நிலையிலேயே காணப்படுகின்றன. தேர்தல் காலங்களில் தாஜூடீனின் கொலை பற்றி பலரும் மேடைகளில் பேசிய போதிலும், எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை.

கடந்த அரசாங்கம் இந்த சம்பவம் பற்றிய எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் பதவி ஏற்ற ஆரம்ப காலப் பகுதியில் சிறந்த முறையில் விசாரணைகளை முன்னெடுத்தது. தாஜூடீனின் சடலத்தையும் மீளத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தியிருந்தது.

இதேவேளை, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே தேங்கிக் கிடக்கின்றது. எமது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் என்றாவது உண்மை அம்பலமாகும் என்று காத்திருக்கின்றோம் என தாஜூடீனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. My3 is very busy with Central Bank Bond Issue.

    ReplyDelete
  2. இது ரணிலின் கபட நாடகம். நிச்சயமாக ஒருநாள் தண்டனை பெறுவார்கள் சகோதரி.

    ReplyDelete
  3. குற்றவாளிகள் தப்பிக்காமல் அவர்களுக்கு தண்டனை றெற்றுக்கொடுக்க பலமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. அவைகளை பெறுவதிலே இத்தாமதம்
    ஏற்படுகிறது. இன்சா அல்லாஹ் அவர்களுக்கு விரைவில்தண்டனை
    கிடைக்கும். சற்று பொறுத்துக்கொள்ளுங்கள் சகோதரியே.

    ReplyDelete
  4. Mill of God grinds slow but sure! Be patient sister. Waffa master.

    ReplyDelete

Powered by Blogger.