Header Ads



3 வது தடவையாக, மஹிந்தவை தோற்கடிப்போம்..!

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஆரம்பகட்ட நட­வ­டிக்­கை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஆரம்­பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலி­யான குற்­றச்­சாட்­டு­க்களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் சுமத்தி வரு­கின்­றனர். 

இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் ஊடாக மூன்­றா­வது தட­வை­யாக மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டித்து அவ­ருக்கு பதி­ல­ளிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு ஆணைக்­குழு அமைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒத்­து­ழைப்பு வழங்­கினார். இதன்­பி­ர­கா­ரமே அவர் ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளித்தார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சம­கால அர­சியல் நில­வரம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை மத்­திய வங்கி மோசடி தொடர்பில் குற்­றச்­சாட்டு எழுந்த போது அதனை உரிய முறையில் விசா­ரணை செய்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிட்­டி­பன தலை­மை­யி­லான குழு­வொன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாக கொண்டு  பாரா­ளு­மன்­றத்தில் விவா­த­மொன்­றையும் பெற்­றுக்­கொ­டுத்தார். 

அதன்­பின்னர் பொதுத் தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் தனக்கு சாத­க­மான ஒரு­வரை நிய­மிக்­காமல் கோப்­கு­ழு­விற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்­தியை தலை­வ­ராக நிய­மித்து இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஒழுங்கு முறை­யுடன் நடந்து கொண்டார். 

கோப் குழுவின் அறக்கை கிடைக்க பெற்ற பின்னர் அதனை உட­ன­டி­யாக சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் பிர­தமர் முன்­னின்று செயற்­பட்டார். இந்த மோசடி தொடர்பில் எடுக்க வேண்­டிய சட்ட நட­வ­டிக்கை குறித்தும் தண்­டனை குறித்தும் பிர­தமர் கேட்­ட­றிந்தார்.

அதன்­பின்னர் குறித்த மோசடி தொடர்­பாக மேலும் விசா­ரணை செய்­வ­தற்கு வழங்கி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பூரண ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­கினார். இதன்­பி­ர­கா­ரமே குறித்து ஆணைக்­குழு முன் சென்று சாட்­சி­ய­ம­ளித்தார். இதன் ஊடாக தான் ஒழுக்­கத்­து­டனும் நேர்­மை­யு­ட­னும கூடிய அர­சி­யல்­வாதி என்­ப­தனை மீண்டும் நாட்­டுக்கு நிரூ­பித்தார்.

தற்­போது ஒரு சில அர­சி­யல்­வா­திகள் இந்த மோச­டியை மைய­மாக வைத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தற்­போது அதுவே அவர்களுக்கு பாரமாகியுள்ளது.

இந்த மோசடியை அடிப்படையாக கொண்டு மக்களின் கவனத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் திசைத்திருப்ப பார்கின்றனர்.  இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம்.

No comments

Powered by Blogger.