Header Ads



இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் செல்ல 3000 பேருக்கு வாய்ப்பு


இலங்கையிலிருந்து 2018 ஆம் வருடத்தில்,  புனித மக்காவுக்கு ஹஜ்  செல்வதற்கு சவுதி அரசு 3000 பேருக்கு அனுமதி வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சவுதி சென்றுள்ள அமைச்சர் ஹலீம் தலைமையிலான குழுவுக்கும், சவுதி அரேபிய அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

மக்கா பகுதியில் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள், இன்னும் முழுமை பெறாமையால் எல்லா நாடுகளுக்குமான கோட்டாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சவுதி அதிகாரிகள், எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான இலங்கையர்களுக்கு செய்ய வழங்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

2 comments:

  1. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
    (அல்குர்ஆன் : 2:125)

    ReplyDelete
  2. wish all hajjajis a safe and useful journey in advance.

    ReplyDelete

Powered by Blogger.