Header Ads



2021ஆம் ஆண்டுவரை, நாட்டை சுதந்திரக்கட்சியும், ஜனாதிபதியுமே ஆட்சி செய்வார்கள்

அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் யார், அமைச்சர்கள் யார் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிப்பார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

5 நீதியரசர்களை கொண்ட அமர்வு அடுத்த இரண்டு தினங்களில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பார்கள்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியும் என அனைவரும் நினைத்தனர். 19ஆவது திருத்தச் சட்டம் எமது ஜனாதிபதிக்கு பொருந்தாது.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச் சட்டம் சந்தர்ப்பத்தை வழங்கும்.

இதனால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியே முடிவு செய்வார். அதேபோல் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களையும் ஜனாதிபதியே தெரிவுசெய்வார்.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை நாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே ஆட்சி செய்வார்கள் எனவும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.