Header Ads



மங்களவுக்கு எதிராக 13 வழக்குகள்

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுபான நிலையங்களில் பெண்களும் கடமையாற்றலாம் என்பது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்தமைக்கு எதிராக அமைச்சருக்கெதிராக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தங்களுடைய அடிப்படைய உரிமையை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்ற முடியும் எனவும், பெண்கள் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும், மதுபான விற்பனை நிலையங்கள் இரவு பத்து மணி வரையில் திறந்திருக்க முடியும் எனவும் அறிவித்தல் விடுக்கும் வகையில் வர்த்மானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். பின்னர் ஜனாதிபதியின் அழுத்தம் காரணமாக குறித்த வர்த்தமானி அறிவித்த மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இது தங்களுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மதுபானங்களை, பெண்கள் கொள்வனவு செய்யும் உரிமையைத் தடுப்பதன் மூலம் அரசமைப்பில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி தமக்கு விருப்பமான தொழிலைச் செய்வதற்கான பிரசைகளின் சுதந்திரம், இந்த வர்த்தமானியை ரத்து செய்ததன் ஊடாக, பெண் என்பதால் தமக்கு இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகமாக, மதுபான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளவர்கள் பெண்கள் என்றும், ஆண்களுக்கு அமுல்படுத்தப்படாத சட்டம், பெண்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படுவதன் ஊடாக சாதாரண உரிமைகளைத் தாம் இழப்பதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இந்தச் சட்டமானது இராணுவம் மற்றும் கடற்படை சட்டத்தின் கீழ் நடத்தபடும் விற்பனை நிலையங்கள், உணவு விடுதிகள், போன்றனவற்றுக்கு அப்பாற்பட்டதென கலால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் இராணுவத்தில் உள்ள பெண்கள் மதுபானங்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் முடியுமெனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பிரதிவாதிகளாக, அமைச்சர் மங்கள சமரவீர, கலால் திணைக்கள ஆணையாளர், சட்டமா அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

1 comment:

Powered by Blogger.