Header Ads



118 நாடுகளில், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்


இலங்கையின் 70 ஆவது  தேசிய சுதந்திர தின வைபவத்தை உலகிலுள்ள 118 நாடுகளில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கை நாட்டுமக்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டின்கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது இலங்கை 118 நாடுகளில் சுதந்திரம் கொண்டாடுகின்றதாம்.

    ReplyDelete

Powered by Blogger.