Header Ads



103 பக்கங்களுக்கு என்ன நடந்தது என, நாட்டுக்கு கூற வேண்டும் - கம்மன்பில

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆயிரத்து 257 பக்கங்களை கொண்டது என ஜனாதிபதி கூறியிருந்த போதிலும் அதில் ஆயிரத்து 154 பக்கங்களே இருப்பதாகவும் 103 பக்கங்களை காணவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆயிரத்து 257 பக்கங்கள் இருப்பதாக கூறினார். எனினும் நேற்று நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் ஆயிரத்து 154 பக்கங்கள் மாத்திரமே உள்ளன. 103 பக்கங்கள் இல்லை.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்ததாகவும் அதில் பொய்யான விடயங்கள் இருப்பதால் பகிரங்கப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இதனால், ரவி கருணாநாயக்க பொய் எனக் கூறும் விடயங்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதால், 103 பக்கங்கள் குறைந்துள்ளதோ என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அறிக்கை தொடர்பில் மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்ப ஜனாதிபதி அந்த 103 பக்கங்களுக்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு கூற வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
    (அல்குர்ஆன் : 34:3)

    ReplyDelete

Powered by Blogger.