Header Ads



புத்தளத்தில் பாயிஸ் தலைமையில் SLMC தனியே குதிக்கிறது


புத்தளம் நகர சபைக்கு கே.ஏ. பாயிஸ் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ்  தனியே களமிறங்கவுள்ளது.

இதனை அம்மாவட்டத்தின் பிரதான அமைப்பாளர்  கே.ஏ. பாயிஸ் jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

பிரதேச செயலகத்தில்   தான்   கட்டுப்பணத்தை செலுத்திவிட்டதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

தம்மால் இம்முறை    நகரசபை அதிகாரத்தை கைப்பற்ற முடியுமெனவும் அவர், அசைக்கமுடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும், புத்தளம் மாவட்டத்தில் மற்றும் சில சபைகளுக்கு தனியாகவா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா பற்றி முக்கிய கலந்துரையாடல் நடைபெறுவதாகவும், அதுபற்றிய இறுதி முடிவு விரைவில் வெளியாகுமெனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.