Header Ads



மன்னாரில் SLFP வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு


மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு தற்பொழுது மன்னார் றோயல் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெறுவதால் அவ்விடததில் மக்கள் வெள்ளம் அலைமோதுகின்றது.

மன்னார் நகரசபை,மற்றும் மன்னார்,நானாட்டான் மாந்தை மேற்கு  பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள  முக்கியஸ்தர்கள் தமது தொண்டர்கள் ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளனர்.
இதனால் அவ்விடததில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை முசலி பிரதேச போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று காலை நடைபெற்றது.


No comments

Powered by Blogger.