Header Ads



O/L மாணவர்களை இரவு நேரங்களிலும், தங்கவைத்து கற்பிக்கும் தேசிய பாடசாலை


கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை இரவு நேரங்களில் தங்க வைத்து கல்வி கற்பிக்கும் தேசிய பாடசாலை தொடர்பான செய்தி ஒன்று மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

மாத்தளை மாவட்டத்தில் அக்குரம்படவிர கெப்படிபொல தேசிய பாடசாலையில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களையும் தங்க வைத்து கற்பிக்கப்படுகிறது. 

160 மாணவ மாணவிகள் இவ்வாறு அந்த பாடசாலையில் கல்வி கற்கின்றனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்கள் இவ்வாறு தங்க வைத்து கற்பிக்கப்படுகின்றார்கள். 

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான உணவுகள் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய மட்டத்தில் பல திறமைகளை வௌிப்படுத்தியுள்ள குறித்த பாடசாலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம் என்று பாடசாலையின் அதிபர் டீ.ஜே.எஸ். ஜயசிங்க கூறினார்.

3 comments:

  1. Crazy Education System.....

    ReplyDelete
  2. No need for night education.

    ReplyDelete
  3. After some days news will come that, some students conceived.

    ReplyDelete

Powered by Blogger.