Header Ads



மக்கள் பணிக்காக எமது அலுவலகக் கதவுகள், என்றும் திறந்தே இருக்கும் - மஸ்தான் காதர் Mp


-இமாம் றிஜா-

ஒற்றுமையே பலமாகும், நாம் விட்டுக்கொடுப்புடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்று சரிநிகர் சமானமாக இந்த நாட்டிலே நிம்மதியாக வாழமுடியும். அதற்கு கடந்தகால கசப்பணர்வுகளை எம்மிடமிருந்து களைவதற்கு நாம் தயாராக வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். 

இன்று தலைமன்னார் பியர் பகுதியில் எம்.எஸ்.என்டர்பிரைசஸ்  நிறுவனத்தின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றைத் திறந்துவைத்து உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பீரிஸ்,சீபெட்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர். அபேவர்த்தன உள்ளிட்ட அரச உயர் அதிகாரிலும் பொதுமக்களும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றியதாவது,

இன ஐக்கியமும், நல்லிணக்கமும் எமது சகவாழ்விற்கு இன்றியமையாதது என்பதிலே நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தம் எமக்கு மீட்டெடுக்க முடியாத பல உயிரிழப்புக்களையும் உன்னதமான உடமைகளின் அழிவுகளையும் எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது.

அவற்றின் பாதிப்பிலிருந்து எமது சமூகம் மீள்வதற்கான கட்டுமானங்களை எமது நல்லாட்சி அரசில் அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

 மக்கள் பணிக்காக எமது அலுவலகக் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும் என்பதை உங்களுக்கு மீண்டும்  நினைவூட்ட விரும்புகிறேன். 

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு அரசியலில் சேவைகளை மாத்திரமே ஆற்ற முடியும்,
உழைப்பதற்கு அரசியலில் இறங்கவேண்டிய எந்தத் தேவைகளும் எமக்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.